சீயெம் போம்போதும் வரும்போதும் ரோடையே பிளாக் பண்றது வேணாமே!

சீயெம் போம்போதும் வரும்போதும் ரோடையே பிளாக் பண்றது வேணாமே!

சீயெம், மினிஸ்டர்ஸ், ஜட்ஜுங்க ஆபீஸ் போற வழி சாந்தோம் ஐரோடு. அத ஒட்டி வீடுங்றதால, போக வர தினமும் பாக்றது உண்டு. குறிப்பா, சீயெம் போம்போதும் வரும்போதும் ரோடையே பிளாக் பண்ணிருவாங்க. ஜெயலலிதா காலத்ல ஓவர் கெடுபிடி. பத்து நிமிசம் வரைலகூட வெயிட் பண்ண வச்சிருக்காங்க. வெயில் மழை எதுனாலும் நோ எக்ஸ்கியூஸ். கருணாநிதி பீரியட்ல சிக்னல் மட்டும் அவர் வண்டிக்கு ரெட் விழாம பாத்துகிட்டாங்க. பன்னீர்செல்வம் டைம்ல டிராபிக் நிறுத்துற நேரம் ஜெ.க்கு இருந்தத விட கம்மி ஆச்சு.

பழனிசாமி வந்தப்ப ரொம்ப கம்மி ஆச்சு. ஆனா போகப்போக ஜெயா காலம் மாதிரியே கெடுபிடிய அதிகம் ஆக்கிட்டாங்க. பிளாட்பாரத்துக்கும் ரோட்டு விளிம்புக்கும் நடுவுல உள்ள கேப்ல டூவீலர நிறுத்திருந்தாகூட மைக்ல கூப்ட்டு தூக்கு தூக்கும்பாங்க. கடைக்குள்ள நிக்கிறவங்க ஓடிவந்து எடுப்பாங்க. வேற எங்கயும் பார்க் பண்ண விடாம அவங்கள துரத்துவாங்க. நடைபாதைல இடம் இருந்தாலும் ஏத்த விட மாட்டாங்க.

தள்ளுவண்டி காரங்க வரவே கூடாது. எதுனா சந்துக்குள்ள போனா தப்பிக்கலாம். கண்ணுக்கு எட்ன வரைக்கும் ரோட்ல கொசுகூட பறக்க முடியாத அளவுக்கு செஞ்சுட்டு ‘ஆல் க்ளியர்!’னு வாக்கிடாக்கில சொல்லுவாரு டிராபிக் போலீஸ் அதிகாரி. சீயெம் கான்வாய்னு ஏழெட்டு இன்னோவா 80 கிலோமீட்டர் வேகத்ல பறக்கும். முப்பது அடிக்கு ஒருத்தரா நிக்கிற போலீஸ்காரங்க அபவுட் டேன் அடிச்சு பிளாக் கேட்சாட்டம் ஜனங்கள மொறச்சு பாத்து நின்னுக்குவாங்க. பத்து செகண்ட்ல கார்லாம் காணாம போயிரும். ஆலிவுட் படத்துக்கு சூட்டிங் நடக்ற மாதிரி தோணும்.

ஒவ்வொரு நாட்ல ப்ரைம் மினிஸ்டர் ஜனங்களோட ரயில்ல நின்னுகிட்டு போறாரு, அதிபர் சைக்கிள் ஒட்டிகிட்டு சிக்னல்ல மக்களோட வெயிட் பண்றாரு, உலகத்ல பெரிய ஜனநாயகம்னு சொல்ற நம்மூர்ல இந்த வெட்டி பந்தா எதுக்கு?னு எரிச்சல் வரும். சத்தமாவே பலரும் சீயெம் பேர் சொல்லி ஏசுவாங்க. பந்தோபஸ்துக்கு நிக்கிற போலீஸ்ல மெஜாரிடி லேடீஸ். நாங்க என்னங்க செய்ய முடியும்?னு கண்ணாலயும் கையாலயும் பதில் சொல்லிட்டு சங்கடத்தோட நகருவாங்க.

பழனிசாமி மேல மக்கள் கடுப்படிக்க யாரும் பிளான் போட்ருப்பாங்களோ?னு டீக்கடைல பேசுற அளவுக்கு முத்திட்டு பிரச்னை. உயிருக்கு ஆபத்துனு உளவு தகவல் வந்து இப்டி செய்றாங்களா..னு கேட்டா, அந்த மாதிரி எதுவும் இல்லைனு கோட்டைல சொன்னாங்க. போலீஸ்ல பல பேர்கிட்ட விசாரிச்சும் விளக்கம் கிடைக்கல. மேல கை காட்டினாங்க. டிஜிபிக்கு நம்மள தெரியாது, அதனால அவர்ட்ட கேக்கல.

பன்னீர் கான்வாய்க்கும் அதே அளவு கெடுபிடிபண்ணாங்க. அவங்களுக்கு தெரியாம போலீசே ஆர்வக் கோளாறுல செய்யலாம்ல்ல..னு ஒரு சகா கேட்டார். கட்சிலயே சேந்திருங்கனு சொன்னேன். அவரும் விடல. மோடி வந்தா அமித்ஷா வந்தா பல மடங்கு அதிகமா கெடுபிடி செய்றாங்க, அத கேக்க மாட்டீங்களா?ன்னார். அவங்களும் நம்மாளுகளும் ஒண்ணா..னு அதோட விட்டுட்டேன். ஊர் வாய்ல விழக்கூடாதுனு சொல்லுவாங்க. ஜனங்க நம்மள வாழ்த்தணும்னு அவசியம் இல்ல. சபிக்காம இருந்தா போதும். வாழ்க்கை நிம்மதியா ஓடும்.

கதிர்