டெஸ்ட் படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்வது ஏன்? சசிகாந்த் விளக்கம்!

டெஸ்ட் படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்வது ஏன்? சசிகாந்த் விளக்கம்!

புரொடியூசர் சசி காந்த் டைரக்டராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார்.கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. அதிலு . இந்த வருடத்தில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘டெஸ்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘டெஸ்ட்’ படம் குறித்து மீடியாக்களிடம் பேசிய டைரக்டரும், புரொடியூசமான எஸ்.சஷிகாந்த், “நான் முதலில் ரு ஆர்கிடெக்ட். பின்பு தான் தயாரிப்பாளர். ஆனால் சினிமாவில் நுழைவதற்கு முன் கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை முறையாக கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?. இயக்குநராக உருவாகுவதற்கு தான் தயாரிப்பாளராக உள்ளே வந்தேன்.ஆம். படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே இருந்தது, அதனால் நான் பணியாற்றிய படங்களில் இருந்தே கதை சொல்லல் உள்ளிட்ட விசயங்களை கற்றுக்கொண்டேன். 12 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் படத்தின் கதையை எழுத தொடங்கி விட்டேன். ஆனால், ஒவ்வொரு முறையும் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் போது, படம் தயாரிப்பில் ஈடுபட்டுவிடுவதால், இயக்க முடியாமல் போய்விடும். கொரோனா நேரத்தில் கிடைத்த நேரத்தில் தான், இந்த முறை நிச்சயம் படம் இயக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, மீண்டும் இந்த கதையை எழுத தொடங்கினேன்.

‘டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படம் இல்லை. ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் யார்? என்பதை உணரக்கூடிய ஒரு தருணம் வாழ்க்கையில் வரும், அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதை தான் இந்த படம். நம்மால் இது முடியுமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும், அதை துணிந்து செய்வதில் தயக்கம் காட்டுவோம். ஆனால், நம் வாழ்க்கையில் ஒரு சோதனைக்காலம் வந்துவிட்டால் அதில் இருந்து விடுபடுவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் நாம் யார்? என்பதை நமக்கே புரிய வைக்கும். அப்படிப்பட்ட மூன்று கதைகள் பற்றி தான் பேசியிருக்கிறோம்.

சித்தார்த், மாதவன், நயன்தாரா மூன்று பேருக்குமே ஒரு சோதனை வருகிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை. சித்தார்த் மற்றும் நயன்தாராவிடம் இந்த படம் பற்றிய யோசனையை சொன்ன உடனே நடிக்க சம்மதித்து விட்டார்கள். மாதவன் மட்டுமே பல சந்தேகங்களை எழுப்பினார், அவரது சந்தேகங்களுக்கு ஏற்ப திரைக்கதையை பல முறை மாற்றியமைத்து, இறுதியாக அளித்த திரைக்கதையை படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார். சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார், அவரது துறையில் அவருக்கு வரும் சோதனையை அவர் எப்படி வெல்கிறார், என்பது போல் மாதவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கும் சில சோதனைகள் வருகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள், என்பதை தான் படம் பேசும். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது போல தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒடிடி-யில் நேரடியாக படத்தை வெளியிடுவதற்கு காரணம், உலக அளவில் படம் சென்றடைய வேண்டும் என்பதற்கு தான். படம் வெளியான உடன், நெட்பிளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், இந்தியாவில் மட்டும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் பார்ப்பார்கள், அப்போது படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும், என்பதால் தான் ஒடிடியில் வெளியிடுகிறோம்.” என்றார்.

error: Content is protected !!