மத்திய அரசு நிறுவனமான NCL-இல் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான NCL-இல் வேலைவாய்ப்பு!

த்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) காலியாக உள்ள 259 சட்டப்பூர்வ சுரங்கப் பணியிடங்களை (Statutory Mining Personnel) நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விபரங்கள் மற்றும் ஊதியம்

NCL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டு முக்கியப் பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

  1. பதவி: Mining Sirdar T&S Gr. C

  • காலியிடங்கள்: 254

  • சம்பளம்: மாதம் ₹47,330.25/-

  1. பதவி: Surveyor T&S Gr. B (Mining)

  • காலியிடங்கள்: 05

  • சம்பளம்: மாதம் ₹51,103.12/-

கல்வித் தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப பின்வரும் கல்வித் தகுதியையும், அதற்கான உரிய சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

  • Mining Sirdar: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS வழங்கிய செல்லுபடியாகும் ‘Mining Sirdar’ சான்றிதழ், எரிவாயு சோதனை (Gas Testing) மற்றும் முதலுதவி (First Aid) சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது மைனிங் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/பட்டப்படிப்புடன் செல்லுபடியாகும் ‘Overman’ சான்றிதழ், எரிவாயு சோதனை மற்றும் முதலுதவி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • Surveyor: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS வழங்கிய ‘Surveyor’s’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது மைனிங்/மைன் சர்வேயிங் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/பட்டப்படிப்புடன் DGMS வழங்கிய ‘Surveyor’s’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்

விண்ணப்பதாரர்கள் 05.08.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

  • SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்

  • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – Gen/EWS) – 10 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – SC/ST) – 15 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – OBC) – 13 ஆண்டுகள்

  • முன்னாள் ராணுவத்தினருக்கு – அரசு விதிமுறைகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் (Gen/OBC/EWS) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ₹1,180/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (SC/ST/Ex-servicemen/PWD) கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test – CBT) மூலம் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான நபர்கள் NCL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.nclcil.in) மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

இணையதளத்தின் ‘Recruitment’ பக்கத்திற்குச் சென்று, “Employment Notification for Direct Recruitment of Statutory Mining Personnel” என்ற லிங்கைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய பயனர்கள் தங்களின் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் மூலம் பதிவு செய்து கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் லாகின் செய்து தேவையான விபரங்களை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 14.07.2026 முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.08.2026 ஆகும்.

Related Posts