மத்திய அரசால் தடை செய்யப்பட்ட & பயங்கரவாத அமைப்புகளின் புது பட்டியல்!

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட & பயங்கரவாத அமைப்புகளின் புது பட்டியல்!

ந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் 67 அமைப்புகள் மற்றும் சட்டவிரோத குழுக்கள் குறித்த புதிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 45 தீவிரவாத அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள 22 தீவிரவாத குழுக்கள் யுஏபிஏ பிரிவு 3(1)ன் கீழ் சட்டவிரோத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியா முழுவதும் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டவை. இந்தியாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த அந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவது, அதன் உறுப்பினர்களை கைது செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியல் இதோ:

 தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், காலிஸ்தான் கமாண்டோ படை, பப்பர் கல்சா இண்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, ஹிஸ்புல்-முஜாகிதீன், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, மக்கள் விடுதலை ராணும் (பிஎல்ஏ), அசாம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, காங்லீபாக் கம்யூனிஷ்ட், மணிப்பூர் விடுதலை முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அல்-காய்தா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, சட்டவிரோத குழுக்களாக, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி), அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா), நாகாலாந்து சோசலிச கவுன்சில், முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸ்ரத் ஆலம் பிரிவு), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இவை தடைப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன

Related Posts