மணல் கடத்தல் விவகாரம் ; வி.ஏ.ஓ வெட்டிக்கொலை – தூத்துக்குடியில் பயங்கரம்!

மணல் கடத்தல் விவகாரம் ; வி.ஏ.ஓ வெட்டிக்கொலை – தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து வி.ஏ.ஓ இன்று பணியில் இருக்கும் போது அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(56). இவர் முறப்பநாடு அருகில் உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வந்தார். இவர் வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது வி.ஏ.ஓ அலுவலகத்தின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் ஒன்று லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. வி.ஏ.ஓ அலுவலகத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரைக் கைது காவல்துறையினர் செய்துள்ளனர். இதனோடு தொடர்புடைய மாரிமுத்து என்பவரையும் தேடி வருகின்றனர். கோவில்பத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் ஆற்றுமணல் திருட்டு நடந்து வந்தது. அதைத் தவிர்க்க லூர்து பிரான்சிஸ் தீவிர நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸிற்கு மனைவி மற்றும் இருமகன்கள் உள்ளனர். வி.ஏ.ஓ அலுவலகத்திலேயே புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!