இராவண கோட்டம் – விமர்சனம்!

இராவண கோட்டம் – விமர்சனம்!

1957ஆம்  வருஷம் நடந்த முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை, சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட், மாஃபியா மற்றும் சில வணிக ரீதியான சமாச்சாரங்களகளை கலந்துக் கட்டி கதை என்ற பேரில் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது இராமநாதபுரம் டிஸ்ட்ரிக்கில் ஏனாதியைச் சுற்றியுள்ள தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் குட்டி கிட்டி சிறு கிராமங்கள், அங்கு மேலத் தெரு, கீழத் தெருவில் வசிக்கும் இரு வேறு சமூகத்தினர் நிஜ பங்காளிகளாக ஒன்றுக்குள் ஒன்றாக் பழகி வருகின்றனர். . இச்சூழலில் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை அந்த கிராமத்தில் உள்ள இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் முயற்சிகள் அரங்கேறுகின்றன. சாந்தனு – ஆனந்தி காதல் இதற்கு பகடைக்காயாய் மாற, தண்ணீர் பஞ்சத்தின் மூல வேறான சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து செயல்படும் பிரபுவும் இளவரசுவும் கொல்லப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? இரு பிரிவுகளிடையே கிராமத்தில் மூண்ட கலவரம் ஓய்ந்ததா என்பதே கதை!

ஹீரோ சாந்தனு என்றாலும் அவருக்கு ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கு உரிய வகையில் ஓப்பனிங் சாங்கோ, ஃபைட்டோ வைக்காமல் இருந்ததே ரசிக்க வைக்கிறது. சாந்தனுவும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் கதையைத் தாங்கிச் செல்லும் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் பெஸ்ட் டான்ஸர் என்பது எல்லோருக்கும் தெரியும் – ஆனால் அதற்கு இந்தப் படத்தில் அதிக வேலை இல்லை. மாறாக அடி தடி காட்சிகளே அதிகம். அதனால். ஆக்ரோஷமான சண்டை, ரசம் மிளிரும் காதல், உணர்ச்சி பிறழாத நடிப்பு என்று அநாயசமாக தன் பாத்திரத்தைச் சுமந்து கிடக்கிறார்.

இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர். கயல் ஆனந்திக்கு. பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போல் இரு சமூகத்து பிரச்னை, தன்னைச் சுற்றி நடக்கும் சிக்கல்கள் புரியாமல் வெள்ளந்திப் பெண்ணாக வலம் வரும் அதே கேரக்டர். சமத்துவம் பேசு சமூக தலைவராக பிரபுவின் உடல்கட்டும், கம்பீர தொனியும் ஏற்ற ரோலுக்கு வலு சேர்க்கிறது. மிகையில்லாத இளவரசு நடிப்பு கவனம் பெறுகிறது. சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக வரும் சஞ்சீவ் சரவணனுக்கு வெயிட்டான ரோல். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் ரோலை உணர்ந்து உருப்படியாக நடித்திருக்கலாம். முருகன் கதாபாத்திரங்கள் வில்லத்தனத்தில் அழுத்தம் கூட்டுகின்றன. தீபா சங்கர், அருள்தாஸ், தேனப்பன், சுஜாதா சிவகுமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை அளவாக வழங்கியுள்ளனர். அருள்தாஸை விட அந்த ஒத்தக் கை நடிகர் அருமையாக ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.

இசை ஜஸ்டின் பிரபாகரன்- படத்தின் காட்சிகளுக்கான விறுவிறுப்பை வழங்கி பலம் சேர்க்கிறது.. ஒப்பாரி பாடல் அடடே சொல்ல வைக்கிறது.. வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா வறண்ட வெயில் பிரதேச மனிதர்களையும், கருவேல மரங்கள் சூழ்ந்த வறட்சி நிலப்பரப்பின் வெம்மையையும் காட்சிபடுத்தி சொல்ல வரும் மேட்டருக்கு பலம் கொடுக்கிறது. . லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கால் ஸ்கீரின் பிளே நீட்ட்டாக இருக்கிறது..

முதல் பாதிப் புளித்துப்போன காதல் காட்சிகளுடன் நகரும் நிலையில், இடைவேளைக்குபின்னர் பாதி வேகமெடுத்து கதையுடன் ஒன்ற வைக்கிறது. அரசியல் தாயத்துக்காக இரு பிரிவினரிடையே கலவரம் தூண்டப்பது அரசியல் கட்சிகள்தான் என்பதை கேஷூவலாக சொல்லி இருக்கிறார், அதாஇயொட்டி பிரபு – இளவரசு உடல்களை வைத்துக் கொண்டு நிகழ்த்தப்படும் சீன்கள் ஒரு வித டென்ஷனை தருவதென்னவோ நிஜம்..

ஆனால் தென் தமிழ்நாடு என்றால் ஜாதி மோதல்,அருவாள், கம்பு வீச்சு என்ற நினைப்பைத் தாண்டாத கதையிது. என்றாலும் நடிகர்களால் பொழுது போய் விடுகிறது..!

மார்க் 3/5