குட்நைட்- விமர்சனம்!

குட்நைட்- விமர்சனம்!

‘என் ஹஸ்பெண்ட் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று சொல்லி டைவோர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்கள் தமிழ்நாட்டிலேயேஉண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது என மருத்துவத்துறை எச்சரித்திருந்த நிலையில் நம் போன்றது மிடில் கிளாஸ் குடும்பங்களை இந்த குறட்டை எப்படி பாதிக்கிறது என்று சொல்லும் படமே குட்நைட்.

மிடில் கிளாஸைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் ஒர்க் செய்யும் ஹீரோ மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடுவதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகிறது. அதாவது, அவரது அலுவலகம் முதல் அக்கம் பக்கத்தினர் வரை அனைவரிடத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளாகி அவமானப்படுகிறார். குறிப்பாகஇந்த குறட்டை பிரச்சனையால் காதலையும் இழந்து மன வருத்தத்தில் இருக்கும் மணிகண்டனின் வாழ்க்கையில் நாயகி மீதா ரகுநாத் வருகிறார். இருவரும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை கல்யாண வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சிறு சிறு மோதல்கள் ஒரு கட்டத்தில், கணவன் – மனைவி பிரிய வேண்டிய சூழலை உருவாக்க, அடுத்து நடந்ததென்ன என்பதை சொல்வதே இந்த குட் நைட் படத்தின் கதை..

ஹீரோ மணிகண்டனின் ஆக்ட். அபாரம்.. படம் தொடங்கியதில் இருந்து கேஷீவல் ஆக்டிங்கில் கவனம் ஈர்க்கிறார். அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும், உடல்மொழியும் பல காட்சிகளில் அபாரம். தூங்கும் போது குறட்டை விடுவது கூட நடிப்பு என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு கேஷூவலாக இருக்கிறது. … படம் முழுக்க பார்வையாளர்களின் கைதட்டலை பெறுகிறார். ‘ஜெய்பீம்’, ‘ஏலே’, தற்போது ‘குட் நைட்’ என்று கவனிக்கத்தக்க படங்கள் மூலம் நினைவில் நிற்கும் அவர் இந்த குட் நைட்டில் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார், அலுவலகம் மற்றும் குடும்ப நபர்களிடம் குறட்டையால் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார். சோகம், மகிழ்ச்சி, காதல், மோதல் என அனைத்து உணர்வுகளையும் மிக சாதாரணமாக வெளிக்காட்டும் மணிகண்டன், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் மோகன் என்ற நடுத்தர குடும்ப இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகியாக வரும் மீத்தா ரகுநாத்துக்கு இது இரண்டாவது படம். அபாரமான நடிகையாக வலம் வருவதற்காக அத்தனை அம்சங்களும் அவரிடம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இனி அடுத்தடுத்து இவரை திரையில் பார்க்கலாம்..

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், மணிகண்டனுடன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் ஜாலியாக நடித்திருப்பவர் பல சமயங்களில் தனிக் கவன செய்ய வைத்திருக்கிறார். தாத்தாவாக வரும் டைரக்டர் பாலாஜி சக்திவேல், பாட்டியாக வரும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவியாக குழந்தை இல்லாதவராக வரும் ரைச்சேல் ரெபாகா, ஐடி நிறுவனத்தில் ஹீரோவுக்கு டென்ஷன் கொடுப்பது மட்டுமே செய்யும் மேனேஜர் ரோலில் வரும் பக்ஸ், மணிகண்டனின் அம்மாவாக வரும் உமா ராமச்சந்திரன் என படத்தில் நடித்திருக்கும் சகல நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தின் கனத்தை சரியாக பிரிந்து நடித்து சபாஷ் பட்டம் பெறுகிறார்கள்

‘என் ஹஸ்பெண்ட் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று சொல்லி டைவோர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்கள் தமிழ்நாட்டிலேயேஉண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது என மருத்துவத்துறை எச்சரித்திருந்த நிலையில் நம் போன்றது மிடில் கிளாஸ் குடும்பங்களை இந்த குறட்டை எப்படி பாதிக்கிறது என்று சொல்லும் படமே குட்நைட்

மிடில் கிளாஸைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் ஒர்க் செய்யும் ஹீரோ மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடுவதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகிறது. அதாவது, அவரது அலுவலகம் முதல் அக்கம் பக்கத்தினர் வரை அனைவரிடத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளாகி அவமானப்படுகிறார். குறிப்பாகஇந்த குறட்டை பிரச்சனையால் காதலையும் இழந்து மன வருத்தத்தில் இருக்கும் மணிகண்டனின் வாழ்க்கையில் நாயகி மீதா ரகுநாத் வருகிறார். இருவரும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை கல்யாண வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சிறு சிறு மோதல்கள் ஒரு கட்டத்தில், கணவன் – மனைவி பிரிய வேண்டிய சூழலை உருவாக்க, அடுத்து நடந்ததென்ன என்பதை சொல்வதே இந்த குட் நைட் படத்தின் கதை..

ஹீரோ மணிகண்டனின் ஆக்ட். அபாரம்.. படம் தொடங்கியதில் இருந்து கேஷீவல் ஆக்டிங்கில் கவனம் ஈர்க்கிறார். அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும், உடல்மொழியும் பல காட்சிகளில் அபாரம். தூங்கும் போது குறட்டை விடுவது கூட நடிப்பு என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு கேஷூவலாக இருக்கிறது. … படம் முழுக்க பார்வையாளர்களின் கைதட்டலை பெறுகிறார். ‘ஜெய்பீம்’, ‘ஏலே’, தற்போது ‘குட் நைட்’ என்று கவனிக்கத்தக்க படங்கள் மூலம் நினைவில் நிற்கும் அவர் இந்த குட் நைட்டில் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார், அலுவலகம் மற்றும் குடும்ப நபர்களிடம் குறட்டையால் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார். சோகம், மகிழ்ச்சி, காதல், மோதல் என அனைத்து உணர்வுகளையும் மிக சாதாரணமாக வெளிக்காட்டும் மணிகண்டன், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் மோகன் என்ற நடுத்தர குடும்ப இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகியாக வரும் மீத்தா ரகுநாத்துக்கு இது இரண்டாவது படம். அபாரமான நடிகையாக வலம் வருவதற்காக அத்தனை அம்சங்களும் அவரிடம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இனி அடுத்தடுத்து இவரை திரையில் பார்க்கலாம்..

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், மணிகண்டனுடன் போட்டி போட்டு கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் ஜாலியாக நடித்திருப்பவர் தனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியில் கலங்க வைத்திருக்கிறார். தாத்தாவாக வரும் டைரக்டர் பாலாஜி சக்திவேல், பாட்டியாக வரும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரைச்சேல் ரெபாகா, ஐடி நிறுவனத்தின் மேனேஜர் ரோலில் வரும் பக்ஸ், மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் உமா ராமச்சந்திரன் என படத்தில் நடித்திருக்கும் சகல நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தின் கனத்தை சரியாக பிரிந்து நடித்து சபாஷ் பட்டம் பெறுகிறார்கள் .

இசையமைப்பாளர் ஷீன் ரோல்டன் பங்கு குட் நைட்டுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கேமராமேன் ஜெயந்த் சேதுமாதவன் ஒற்றை வீட்டினுள் பல காட்சிகளை எடுக்க நேர்ந்தாலும், தன் பணியை ஃபர்பெக்டாக செய்து அசத்தியுள்ளார்.

எடுத்துக் கொஇண்ட தக்கணூண்டு சப்ஜெக்டா; படத்தின் முதல் பாதி ரசிக்கும்படி நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் திணறிஉள்ளார். குறட்டைக்கு மருத்துவ ரீதியான தீர்வை கூட குழப்பி விட்டார். கூடவே செண்டிமெண்ட் காட்சிகளால் கொஞ்சம் ரசிகர்களையும் குறட்டை விட ஆயத்திப்படுத்தியவர் கிளைமாக்ஸில் பின்னி விட்டார்

மொத்தத்தில் இந்த குட் நைட் – பல சினிமா பிரபலங்களின் தூக்கத்தை கலைத்து விடும்

மார்க் 3.5/5.

error: Content is protected !!