மாரீசன் – விமர்சனம்!
மாரீசன் ஒரு ஃபீல் குட் படம் என்று சொல்ல முடியாது. . இரண்டாம் பாதியில் இருந்து படம் கிரைம் த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. நம் நகைச்சுவை மன்னன் வடிவேலு கொலையெல்லாம் செய்கிறார். இது சுவாரஸ்யமான ஒரு திருப்பம் என்றாலும் படம் முழுக்க பகத், வடிவேலுவை தாண்டி ஏனையோ பிரச்சனையோ கதாபாத்திரங்களோ கதையில் கொஞ்சமும் எடுபடவில்லை. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கோவை சரளா நாட் பேட் சாய்ஸ் தான் என்றாலும் அவருக்கு கதையில் கொஞ்சமும் பங்கு இருக்கவில்லை. . இரண்டாம் பாதியில் குழந்தை வன்கொடுமையைப் பற்றி படம் பேசி கவர முயல்வதெல்லாம் ஒட்டவே இல்லை.. அதிலும் பகத் ஃபாசில் ஆக்டிங் முழுக்க ஸ்டேஜ் டிராமா ஆர்டிஸ்ட் தொணியில் உள்ளது.
அதாவது திருட்டு கேஸில் ஜெயிலில் இருந்துவிட்டு விடுதலையாகிறான் தயாளன் (ஃபகத் ஃபாசில்). வெளியே வந்த இடத்த்ஹில் வழக்கம் போல் ஒரு வீட்டுக்கு திருடப் போன போது, அங்கு வேலாயுதம் என்ற ஒரு நபர் (வடிவேலு) சங்கிலியால் கட்டிப் போடப்பட்டு இருப்பதைப் பார்க்கிறான். தனக்கு முதுமையால் ஏற்படும் நினைவிழப்பு நோய் (அல்சைமர் ) இருப்பதாகவும் அதனால் மகன் கட்டிப் போட்டு விட்டுப் போய் இருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வெளியே அழைத்துப் போனால் இருபத்தைந்து ஆயிரம் பணம் தருவதாகவும் சொல்கிறார் . ‘ஏ டி எம் போனால் எனக்கு பின் நம்பர் ஞாபகம் வந்து விடும் ‘ என்று அவர் சொல்ல தயாளன் அவரை அழைத்துப் போக , அங்கே வேலாயுதம் அக்கவுண்டில் மேலும் இருபத்தைந்து லட்சத்து பதினெட்டாயிரம் இருப்பதை அறிகிறான் தயாளன். .அதையடுத்து வேலாயுதத்தின் பின் நம்பர் அறிந்து மொத்த பணத்தையும் சுருட்டவும் அதுவரை அவருடன் இருக்கவும் முடிவு செய்யும் போதே வேலாயுதமும் மீண்டும் வீட்டுக்கு போக விரும்பவில்லை என்றும் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு நண்பர் , திருவண்ணாமலையில் உள்ள உறவினர் (லிவிங்ஸ்டன்) , பாலக்காட்டில் உள்ள உறவுகளைப் பார்க்க விரும்புவதை சொல்கிறார். அங்கு எல்லாம் அழைத்துப் போவது என்று போய் வழியில் எப்படியாவது ஏ டி எம் பின் நம்பரை அறிந்து வேலாயுதம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் சுருட்ட பிளான் போடுகிறான் பகத். அப்படி பயணம் போன இடத்தில் மது அருந்தி பகத் மட்டையாகி விட மறதி நோய்வாசி என்று சொல்லிக் கொள்ளும் வடிவேலு சிலரை தேடிப் பிடித்து வடிவேலு கொலை செய்து விட்டு அப்பாவியாய் சுருண்டு கொள்கிறார். ஆக வடிவேலு யார்?, நிஜமாகவே அவருக்கு அல்சைமரா? வடிவேலு செய்யும் கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு ? என்பதே மாரீசன் படக்கதை.
நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் கொண்டு வந்திருப்பார். இதில் எளிமையான தோற்றத்தில் போதிய நடிப்பைக் கொடுத்துள்ளார். ஆனாலும் சில காட்சிகளில் வடிவேலு அந்தியப்பட்டு போய் வுடுவதும் நிஜம்.நடிப்புப் பேரரக்கன் ஃபகத் ஃபாசிலையும், வடிவேலுவையும் முழுப் படத்திலும் காட்சிகளில் ஒன்றாகக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்ற புள்ளியில்தான் மாரீசன் தொடங்கியதாக இயக்குநர் சுதிஷ் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் சந்திக்கும் புள்ளியில் தொடங்கும் சுவாரசியம், இடையில் கொஞ்சம் திகட்டிவிடுகிறதும் உண்மை.
கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோர்களுக்கு போதிய ஸ்கோப் இல்லை.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சொல்லும்படியாக இல்லை . அதே சமயம் வழக்கம் போல் , இளையராஜாவின் சில பாடல்கள் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னணி இசையும் அச்சூழலில் சரியாக இருந்தது போல் தோனியதே தவிர மனதில் பதியவில்லை.
வடிவேலு நடித்திருப்பதால் இப்படத்தை வடிவேலு நடித்த ஒரு தமிழ் படம் என்கிற நினைப்போடு படத்தைப் பார்க்க துவங்கினால் துவண்டுப் போகிற வாய்ப்புண்டு. மலையாளப் படங்களுக்கே உரிய பண்டம்.அதன் ஏற்றத் தாழ்வுகளில் சிக்குண்டு ஒரு நேர்த்தியானப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.ஒரு கதையை சொல்லி பின் அக்கதைக்குப் பின்னே இருக்கும் வேறொரு கதையை டிவிஸ்ட்களாக்கி நிரப்பப் பார்த்திருக்கிறார்கள்.அதற்கானப் பலன் முழுவதும் கிட்டாததால் பார்வையாளன் ஏமாற்றமடைந்து விடுகிறான்
மொத்தத்தில் மெயின் கேரக்டர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் . அத்துடன் கதை மெதுவாக நகர்கிறது. மேலும் படத்தில் செண்டிமெண்டுக்காக வைக்கப்பட்ட வடிவேலு – சித்தாரா காட்சிகள் சரியாக கனெக்ட் ஆகவில்லை . இந்தப் பிரச்னைகளைத்தாண்டி மாரீசன் படத்தை பார்க்க விரும்பினால் சின்னதிரையில் விரைவில் வந்து விடும். அது வரை பொறுத்தருள்க
மார்க் 2.25/5


