“துருவங்கள் பதினாறு” – திரைப்படத்திற்கு ஃபெயில் மார்க்! ஏன் தெரியுமா?

“துருவங்கள் பதினாறு” – திரைப்படத்திற்கு ஃபெயில் மார்க்!  ஏன் தெரியுமா?

ஒரு அல்லது கொலை பற்றி விசாரணை செய்யும் படங்கள் தமிழில் மிகவும் குறைவு. பெரு வெற்றியை தரும் ரசிகனை பரபரப்புக்குள்ளாக்கும் இந்த வகை சினிமாக்களில் லாஜிக் வெகு முக்கியம். அதனாலோ என்னவோ தமிழில் இப்படங்கள் அதிகம் வருவதில்லை. இப்படத்தைப் பொறுத்தவரை கதையை டிவிஸ்ட்டை முதலில் படம் பார்ப்பவர்கள் சொல்லிவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறார் இயக்குனர். முழுதாகவே கதை சொன்னாலும் புரியும்படியோ சுவாரஸ்யமாகவோ படம் இல்லை என்பது தான் சோகம்.

d 16 dec 29

நடு ரோட்டில் ஒருவன் சுடப்பட்டு கிடக்கிறான். ஒரு அபார்ட்மெண்ட் ஃபிளாட்டில் இருந்து ஒரு பெண் காணாமல் போகிறாள் இரண்டு கேஸையும் போலிஸான ரஹ்மான் விசாரிக்கிறார். இந்த சம்பவங்களி. பின்னனி என்ன இதற்குள்ள தொடர்பு என்ன யார் குற்றவாளி என்பதை இறுதியில் கண்டுபிடித்தார்களா என்பது தான் கதை.

வெகு சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் கதை படத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத விஷ்யங்களில் அதிகமாக பயணிப்பதால் எந்த ஈர்ர்பும் இல்லாமல் கடந்து முடிகிறது.

ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கும் கதையில் வெகு முக்கியம் குற்ற சம்பவத்தின் பாதிக்கபபட்டவரின் விவரங்கள் அவர்கள் வழி தான் ரசிகர்கள் குற்றச் சம்பவத்தின் பாதிப்பை உணர்வார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷி ராஜின் வேதனை தெளிவாய் ரசிகனுக்கு விளக்கப்பட்டிருக்கும். இதில் அது சுத்தமாக சொல்லப்பட வில்லை. இந்தப் படத்தில் குற்றச் சம்பவத்தில் யார் கொலையாகிறார்கள் என்பது கூட தெளிவாகவில்லை. அதை நீங்கள் டிவிஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் ரசிகன் படத்துடன் ஒன்றிப்போக வேண்டிய ஆரம்ப காட்சிகள் எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது. இடையில் ஏற்படும் சிறு சுவாரஸ்யங்களும் வழி மாறிப்பயணிக்கும் திரைக்கதையில் புஸ்ஸாகி விடுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் மிகபெரும் லாஜிக் பொத்தல். மொத்தத் திரைக்கதையும் அந்த சப்பை கிளைமாக்ஸில் ஆட்டம் கண்டு விடுகிறது. படம் முழுதும் நடைபெறும் சம்பவங்கள் ரசிகனிடம் எந்தத் தாக்கதையும் உண்டு செய்யாததே இப்ப்டத்தின் மிகப்பெரும் பலவீனம்.

அறிவாளி ரசிகனை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தில் பல லாஜிக் பொத்தல்கள் ரஹ்மான் இன்ஸ்பெக்டர் ஆனால் அவர் செல்போன் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் தொடர்ந்து இருக்கிறார். அவர் வீட்டில் லேண்ட்லைன் புதிதாகத்தான் வாங்குவார் அவர் குடும்பம் பற்றி எவர்க்கும் தெரியாது. காணமல் போன பெண்ணின் வீட்டில் காதலன் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களும் போலீஸூக்கு கிடைக்கவே கிடைக்காது. சாட்சி சொன்னவனை சந்தேக நபரின் வீட்டில் பார்த்தும் ஏதும் விசாரிக்காது போலீஸ். இப்படி படம் நெடுகிலும் லாஜிக் ஒட்டாத திரைக்கதையில் உடைந்து விழுகிறது படம். சாரசரி ரசிகனுக்கோ சுத்தமாக புரியாத மொழி பாதிப்பிலான கதை. படம் தமிழ் நாட்டில் நடக்கிறதா என்பதே சந்தேகம். கொஞ்சமும் ஒட்டாத மண்சார்த்தன்மை படம் முழுதும் விரவிக் கிடக்கிறது. இயக்குனர் ஆங்கிலப் படங்களின் பாதிப்பில் உருவாக்க முனைந்திருக்கிறார். அது பரிதாபமாய் முடிந்திருக்கிறது.

படத்தின் ஆறுதல் படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள். ரஹ்மான் தன் கேரக்டரை கச்சிதமாய் உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் சிறு சிறு கதாப்பாத்திரங்களும் தங்கள் கேரக்டர்களை சரியாய் வெளிப் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் அழகியலை கூட்டியதில் மிக அதிகப் பங்கு வகித்திருக்கிறார்கள் படம் முழுதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலர் டோன் திரில் படத்தின் தன்மையை அழ்காய் எடுத்து வைக்கிறது. கேமரா கோணங்கள் ஆங்கிலப் படத்தின் சாயலில் தரத்தில் இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பிறகு ஆர்ட் டிபாரட்மெண்டும் ஆடியோ டிபார்ட்மெண்டும் பலமாய் உழைத்திருக்கிறார்கள். ரஹ்மான் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டே பேசிவரும் காட்சியில் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொரு முனையிலும் பதில் சொல்வதில்.. என ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் செய்திருக்கும் உழைப்பு தான் இந்தப் படத்தின் மீதான கவனத்தை அதிகப் படுத்துகிறது. இந்த கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஓவர் அறிவாளித்தனத்தை காட்டுவதாய் செல்லும் திரைக்கதை பலருக்கும் புரியாமல் எந்த பாதிப்பையும் ரசிகனிடம் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது. கொலைக்கான விசாரணை படத்தில் படம் முடியும்போது யார் கொலை செய்தால் என்ன என்றிருப்பதால் குடும்பத்தோடு சென்று பார்க்க லாயக்கில்லாத படம் என்பதுடன் யாராலும் மறுபடியும் பார்க்கலாமே என்றும் தோன்றாத படமிது.

Related Posts