June 4, 2023

கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

ஈவ்னிங் என் மொபைலில் நாலைந்து முறை ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. இப்போ தெல்லாம் ரிங் வந்தவுடன் நான் அட்டெண்ட் செய்வதில்லை.., காரணம் வரும் கால்களில் கால்வாசி, ‘சாரி சார் கைப்பட்டு காலுக்கு போயிடுச்சு’ என்று சொல்வதுதான்.. ஆனால் இந்த கால் ஆறெழு ரிங்க்-க்கு பிறகு கட் ஆகி மறுபடியும் அழைத்து கொண்டே இருந்த சூழலில் என் லேண்ட் லைனில் இருந்து மேற்படி நம்பருக்கு போன் செய்தேன்.. எடுத்தவர்.. வட சென்னை ரூலிங் பார்ட்டி பிரபலம்..!

என் பேரைச் சொன்னதும் “ அடடே.. . வழக்கமா உங்க மொபைலுக்கு கண்டாக்ட் செஞ்சா ஏதாச்சும் பாட்டு வரும்.. அதிலும் ரொம்ப வருசமா ‘அன்பென்ற மழையிலே’ சாங் தொடங்கி ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ பாட்டை கேக்கவே உங்க நம்பருக்கு வருவேன்..

ஆனா இன்னிக்கு ஒரு பாட்டையும் காணோமுன்னதும் டவுட் வந்து கட் பண்ணிகிட்டே இருந்தேன் . எப்படி இருக்கீங்க? பார்த்து நாளாச்சு.. பேசியும் நாளாச்சு..? ” என்றவரிடன் கொஞ்சம் பேச்சுக் கொடுத்த போது கிடைச்ச தகவல்தான் கொஞ்சம் பகீர் ரகம்..

போன செவ்வாய் கிழமை நமக்கு (?) கொரோனா வந்துடுச்சு.. அதுனாலே வீட்டுக்குள்ளெயே இருந்தேன்.. ஆனா நேத்திக்கு அம்மா பிறந்த நாள் பங்கஷனாச்சே.. எலெக்‌ஷன் வேற வர்றச்சே நாம போகலைன்னா பொழப்பு போயிடுமுன்னு வெள்ளையும்,சொள்ளையுமா கிளம்பிட்டேன்..

பார்ட்டி ஆபீஸ்லே ஃபார்ம் வாங்கிட்டு அப்படியே அம்மா சமாதிக்கும் ஒரு ஆட்டோவிலே – நம்ம ஏரிய பசங்க ஆறு பேரோட போயிட்டு வந்துட்டேன்.. இன்னிக்கு காலையிலே என் கூட வந்தவங் களுக்கு ரெண்டு பேருக்கு ஜூரமாம்.. அநேகமா கொரோனாவாதான் இருக்கும்..” என்றவரிடம் மேலும் பேச்சுக் கொடுத்த போது கிடைத்த தகவலைதான் இனி உறுதிப் படுத்த வேண்டும்:

“இப்போ ஆப்போசிட் குரூப்-புக்குள்ளே அனுப்பறதுக்குண்ணே கொரோனா பேஷண்ட் லிஸ்ட் கேக்கறாங்க.. பாசிட்டிவ்-ன்னு சர்ட்டிபிகேட் காண்பிக்கும் ஆளுங்களை செலக்ட் பண்ணி எதிரணி கூட்டத்துக்குள் போய் வர ஐயாயிரம் ரூபாய் பேசி அடிசினலா அங்கே எத்தனை பேரைக் கட்டிப் பிடிச்சி, கை குலுக்கிட்டு வாராங்களோ அத்தனையையும் கணக்கு போட்டு அடிசினல் பேமண்ட் கொடுக்கச் சொல்லி மேலிட ஆர்டர்.. அப்படி கட்டிப் பிடிப்போர் & கைகுலுக் கோவுரை ரிக்கார்ட் பண்ண பென் கேமரா கூட குடுக்கறாங்க.. நான் கூட எனக்கு சீட் கிடைக்கக் கூடாது-ன்னு ஆசைப்பட்ட மூனு பேரை ஒரே ஆட்டோவிலே கூட்டிட்டி போனேன்னா பார்த்துக் கங்க..” என்றவர் முத்தாய்ப்பாக சொன்ன விசயம்தான் கோலிவுட் ரிப்போர்ட்டர் என்ற முறையிலும் எனக்கு கொஞ்சம் கவலையைக் கொடுத்தது,,

‘அது சரி.. நீங்க என்ன கொஞ்ச நாளா சினிமா பங்ஷன்., நிகழ்ச்சிக்கு வர்றதில்லையாம்.. நம்ம மச்சான் சொன்னான்.. அவன்தான் போன மூனு நாளா என்னைக் கவனிச்சிக்கிறான்.. அவனுக்கு இரும்பு உடம்பு போலிருக்கு.. என்னை சில சமயம் கைத்தாங்கலா பாத்ரூம்- வரை கூட்டி போனவனுக்கு கொரோனா டேஸ்ட் (?) வரலை-ங்கறான்.. அவன் ஜாயிண்ட் பண்ணி இருக்கற வெப்சைட்டில் லீவு கொடுக்க மாட்டே-ன்னு சொன்ன ஒருத்தனை நேத்திக்கு பாராட்டற மாதிரி கட்டி பிடிச்சினாம்.. இன்னிக்கு அந்த பார்ட்டி லீவாம்.. அநேகமா கொரோனா-வாத்தான் இருக்கும்” அப்ப்டீன்னு சொல்லி மெளனமாகிட்டார்..

நம் நிலையும் அதுவே..!

மகா ஜனங்களே.. எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.. 😭

ஆந்தையார்