தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் Tamilnadu Gym Owners Association சங்கத்தின் தலைவராக அனைவராலும் ஒரு மனதாக ” v ராஜா ” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் உடற் பயிற்சி கூடங்கள் நடத்தி வருவதுடன் ” அருவா சண்ட ” படத்தின் மூலம் சினிமா துறையில் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து அவர், “இந்த சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அணைத்தையும் TNGOA என்ற தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் – னுள் கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தும் வேலைகளை அமைப்பு மேற்கொள்ளும்.. மேலும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்கும் உடற்பயிற்சி சார்ந்த அமைப்புகளை இந்த அமைப்பிற்குள் ஒன்றினைத்து உடற்பயிற்சி துறையை வலுப்படுத்தும் விதமாக நான் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

சினிமா துறை மற்றும் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் ஏற்கனவே TNGOA வில் பொருளாளராக இருந்ததாலும் Tamilnadu Gym Owners Association னுள் தமிழகத்தில் உள்ள அனைத்து உடற்பயிற்சி கூடங்களையும் ஒன்றினைத்து இந்தியாவிலே உடற்பயிற்சி துறையில் ஒரு முதன்மையான அமைப்பாக TNGOA மாறும் என்று உறுதிபட சொல்கிறேன்.” என்றார்

error: Content is protected !!