Exclusive
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயம்!- மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயமானது செயற்கை கோள் தகவல் வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 1970– 80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 39,202 நீர்நிலைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கணக்கைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள 39,202 கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன’ என்று அதிரவைக்கிறது […]