சென்னை புத்தக கண்காட்சி- பிப்ரவரி 16 முதல் நடத்த அரசு அனுமதி!

சென்னை புத்தக கண்காட்சி- பிப்ரவரி 16 முதல் நடத்த அரசு அனுமதி!

சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியை தொடர்ந்து, பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

சென்னையில் ஜனவரி 6 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!