முதல்வர் முன்னிலையில் சமத்துவபுர நுழைவு வாயிலை திறந்து வைத்த பெண்மணி – வீடியோ!

முதல்வர் முன்னிலையில் சமத்துவபுர நுழைவு வாயிலை திறந்து வைத்த பெண்மணி – வீடியோ!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலை பெண்மணி ஒருவர் திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு முற்போக்கு வளர்ச்சி திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில், 1997 முதல் 2001ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை அங்கிருந்த ஒரு பெண்மணியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்குள்ள பெரியாரின் உருவ சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சமத்துவபுரத்தை திறந்து வைத்த அந்த பெண் பெயர் கம்சலா. இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். முதல்வர் ஸ்டாலின் பட்டியல் இன பெண்ணை ரிப்பன் வெட்டி திறக்கச் செய்தது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் உள்ளே இருக்கும் வீடுகளை திறக்க சென்ற போதும் அங்கிருந்த பெண்களை வைத்து முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்ய சொன்னார்.

அதன்பிறகு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார். தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேஷன்கடை ஆகியவற்றை திறந்து வைப்பதோடு, அதே வளாகத்தில் நூலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.

error: Content is protected !!