32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 9)
‘மொந்தா’ புயல் – தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு! Exclusive

‘மொந்தா’ புயல் – தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, வரும் நாட்களில் தீவிர புயலாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் சின்னத்திற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மொந்தா’ (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரம் மற்றும் நகர்வு நிலைகொண்டுள்ள இடம்: இன்று (அக்டோபர் 26) காலை நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென்மேற்கு மற்றும் […]

October 26, 2025 admin
தமிழரின் சுவை நரம்புகள் – ஒரு கார்பரேட் சதி: மரபணுவைச் சிதைக்கும் உணவுப் போர்! Exclusive

தமிழரின் சுவை நரம்புகள் – ஒரு கார்பரேட் சதி: மரபணுவைச் சிதைக்கும் உணவுப் போர்!

தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சுற்றிய ஒரு நண்பர் கண்டறிந்த ஒரு கசப்பான உண்மை, இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் உடல்நலம் மற்றும் கலாச்சாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அது வேறொன்றும் இல்லை; எங்கு நோக்கிலும் பெருகிவிட்ட அந்நிய உணவு வணிகமும், சுவை எனும் நஞ்சும் தான். விஞ்ஞான வளர்ச்சியையும், தகவல் பரிமாற்றத்தின் வேகத்தையும் பெருமை பேசும் நாம், நமது உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மாற்றத்தைப் பற்றிப் பேச மறுக்கிறோம். இது வெறும் உணவுப் பழக்கச் சீரழிவு அல்ல; இது […]

October 24, 2025 admin
அமெரிக்க வாழ் தமிழர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு ‘வைக்கம் விருது’ அறிவிப்பு! Exclusive

அமெரிக்க வாழ் தமிழர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு ‘வைக்கம் விருது’ அறிவிப்பு!

சென்னை: சமூக நீதிக்காக எல்லை கடந்து சென்று பேராடிய தந்தை பெரியார்  நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் மதிப்புமிகு ‘வைக்கம் விருது’ 2025ஆம் ஆண்டிற்கான வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான விருதினை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய-அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான திருமதி. தேன்மொழி சௌந்தரராஜன் -க்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைக்கம் விருதிற்காக தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களுக்கு […]

October 23, 2025 admin
வாகன நிறுத்தப் பிரச்சனைக்கு தீர்வு! புதிய கட்டுமான விதிகளில் திருத்தம் – தமிழக அரசு! Exclusive

வாகன நிறுத்தப் பிரச்சனைக்கு தீர்வு! புதிய கட்டுமான விதிகளில் திருத்தம் – தமிழக அரசு!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் வீட்டு உரிமையாளர் களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு, கட்டிட விதிகளில் முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய பார்க்கிங் விதிகள் அறிவிப்பு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படாதவாறு, வீடு கட்டும்போதே கட்டாயம் வாகன நிறுத்துமிட வசதி (Parking Facility) செய்ய வேண்டும் என அரசு ஏற்கனவே […]

October 17, 2025 admin
விஜய் பேரணி கூட்ட நெரிசல்: கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! Exclusive

விஜய் பேரணி கூட்ட நெரிசல்: கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புது டெல்லி: நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய் தலைமையிலான அரசியல் பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த துயரகரமான கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை, மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நடைமுறை முறைகேடுகள் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மாநிலக் காவல்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரிக்க வேண்டும் என்று சென்னை […]

October 13, 2025 admin
டி.டி.ஜெகநாதன்: ‘பிரிஸ்டீஜ்’ வெற்றிச் சிம்பொனி ஓய்ந்தது! Exclusive

டி.டி.ஜெகநாதன்: ‘பிரிஸ்டீஜ்’ வெற்றிச் சிம்பொனி ஓய்ந்தது!

ஒரு நாட்டின் சமையலறையின் அடையாளம் ஒரு தனி மனிதரின் தொலைநோக்குப் பார்வையால் தீர்மானிக்கப்படுவது அரிது. ஆனால், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் பிரிஸ்டீஜ் குக்கர் விசில் சத்தம், தொழில் துறையில் டி.டி.ஜெகநாதன் என்ற மாபெரும் ஆளுமையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. நகரம் முதல் கிராமம் வரை, இந்தியக் குடும்பங்களின் அத்தியாவசியப் பொருளாகப் பிரிஸ்டீஜை மாற்றியமைத்த ‘சமையல் உலகின் அதிபர்’, தொழில் துறையில் ஒரு தனித்துவமான முத்திரை பதித்த,’சமையல் உலகின் அதிபர்’ என்று அறியப்பட்ட இவர், […]

October 11, 2025 admin
திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை: சிக்கந்தர் தர்காவில் பலியிட தடை; மலைப் பெயர் மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி! Exclusive

திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை: சிக்கந்தர் தர்காவில் பலியிட தடை; மலைப் பெயர் மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிக்கந்தர் தர்கா (Sikandar Dargah) தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி . விஜயகுமார் முக்கியத்துவம் வாய்ந்த பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள், மத நல்லிணக்கம் மற்றும் பாரம்பரியப் பெயர்களைப் பாதுகாப்பது ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களைத் தொட்டுச் செல்கின்றன. 1. சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை தர்காவுக்கு வரும் இஸ்லாமிய பக்தர்கள், வழிபாட்டின்போது ஆடு மற்றும் […]

October 10, 2025 admin
சிங்காரச் சென்னையில் மெரினா நீச்சல் குளம் உருவான கதை தெரியுமா? Exclusive

சிங்காரச் சென்னையில் மெரினா நீச்சல் குளம் உருவான கதை தெரியுமா?

தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வங்காள விரிகுடாவின் அழகிய அலைகளை ஒட்டி அமைந்துள்ள இந்த கடற்கரையின் அருகே, 100 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக நிற்கிறது மெரினா நீச்சல் குளம் (Marina Swimming Pool). இது வெறும் நீச்சல் குளம் அல்ல; சென்னையின் வரலாற்றுச் சுவடுகளையும், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தையும் சுமந்து நிற்கும் ஒரு முக்கியமான நினைவுச்சின்னமாகும். தற்போது, ₹2.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட இந்த நீச்சல் குளம், இன்று […]

October 7, 2025 admin
இறக்குமதி நிறுவனம் vs சென்னை சுங்கத்துறை – ‘ஊழல்’ குற்றச்சாட்டு குறித்த, சமூக ஊடகப் போர்! Exclusive

இறக்குமதி நிறுவனம் vs சென்னை சுங்கத்துறை – ‘ஊழல்’ குற்றச்சாட்டு குறித்த, சமூக ஊடகப் போர்!

சென்னை சுங்கத்துறை மற்றும் ஒரு இறக்குமதி நிறுவனத்திற்கு இடையே நடந்து வரும் ‘ஊழல்’ குற்றச்சாட்டுகள் மற்றும் அதைத் தொடர்ந்த சமூக ஊடகப் போர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சமூக ஊடக யுத்தம்’ என்று கூறப்படும் இந்த நிகழ்வு, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நவீன தகவல் தொடர்பு தளங்கள் வழியாக குற்றச்சாட்டுகள் பரிமாறிக்கொள்ளப்படுவது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி: இந்த விவகாரத்தின் மையத்தில், சென்னையைச் சேர்ந்த சக்தி இண்டர்நேஷனல் (Sakthi International) என்ற இறக்குமதி நிறுவனம் […]

October 2, 2025 admin
கரூர் சம்பவம்: வதந்தி பரப்புவோர் மீது ஸ்டாலின் கண்டனம்!- வீடியோ Exclusive

கரூர் சம்பவம்: வதந்தி பரப்புவோர் மீது ஸ்டாலின் கண்டனம்!- வீடியோ

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 39 முதல் 41 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததார்கள். இந்த நிலையில்,எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள் என்றும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. […]

September 29, 2025 admin
உடனடி செய்திகள்