32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 11)
ஏலத்துக்கு வந்த பாம்பன் பாலம் – சில  ஞாபக குறிப்புகள்! Exclusive

ஏலத்துக்கு வந்த பாம்பன் பாலம் – சில ஞாபக குறிப்புகள்!

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். 111 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் இந்த ரயில் பாலம் தமிழகத்தின் நிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாகும். பெருமை மிக்க இந்த பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாக முடிவு செய்து அதற்காக வேலைகளில் இறங்கி இருக்கிறது . முதலில் ஒரு பிளாஷ் பேக்… 1854ல் இங்கு பாலம் அமைக்க ஆங்கிலேயர்களால் திட்டமிடப்பட்டு 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு […]

August 28, 2025 admin
குலசேகரன்பட்டினம்: இந்தியாவின் புதிய விண்வெளி நுழைவாயிலுக்கு அடிக்கல்! தமிழகம்

குலசேகரன்பட்டினம்: இந்தியாவின் புதிய விண்வெளி நுழைவாயிலுக்கு அடிக்கல்!

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் அடுத்த மைல்கல்லாக உருவெடுக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் இங்கு அமையவிருப்பது, தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், அதிநவீன வசதிகளுடன் உருவாகி வரும் இந்தத் தளம், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது. இன்று, இந்த புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் […]

August 27, 2025 admin
குழந்தைகளை அச்சுறுத்தும் சர்க்கரை நோய்: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை! Exclusive

குழந்தைகளை அச்சுறுத்தும் சர்க்கரை நோய்: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 400 பள்ளி மாணவர்களிடம் ஆரோக்கியம் குறித்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. டாக்டர் சுதா ராமலிங்கம், பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் இந்த ஆய்வு முடிவுகளைப் பற்றி கூறியதாவது: “400 மாணவர்களில் 16% பேருக்கு, பெரியவர்களுக்கு வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த ஆய்வு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டது. நகரங்களில் […]

August 18, 2025 admin
ராமர் புத்தி சுவாதீனம் இழந்தவன்- மீ டு புகழ் வைரமுத்து கிளப்பியச் சர்ச்சை! Exclusive

ராமர் புத்தி சுவாதீனம் இழந்தவன்- மீ டு புகழ் வைரமுத்து கிளப்பியச் சர்ச்சை!

சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர், `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார்.ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவிஞர் வைரமுத்துவுக்கு, ‘கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருது’ வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் நிகழ்வின்போது, வைரமுத்து ராமர் […]

August 9, 2025 admin
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்: வளர்ச்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்! Exclusive

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் வெப்ப அலைகள்: வளர்ச்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்!

பொதுவாக பருவநிலை மாற்றம் என்பது வெறும் சர்வதேச விவாதமாக இல்லாமல், நம்முடைய அன்றாட வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் நேரடி விளைவுகளில் ஒன்று, புவி வெப்பமயமாதல். இந்த அச்சுறுத்தல், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் ஒரு ஆய்வு, கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள வெப்பமயமாதலின் தீவிரத்தை புள்ளிவிவரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, மாநிலத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், அதன் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான ஆபத்தான இடைவெளியை நமக்கு உணர்த்துகிறது. மாற்றங்களின் பின்னணி […]

August 9, 2025 admin
தமிழ்நாட்டில்  +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு!

தமிழகத்தின் மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த புதிய கொள்கையானது தேசியக் கல்விக் கொள்கை (NEP) குறித்த தமிழக அரசின் எதிர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் இந்த ஆண்டை பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தும் […]

August 8, 2025 admin
தமிழ்நாட்டில் சரிந்து வரும் பிறப்பு விகிதம்! முழு விபரம்! Exclusive

தமிழ்நாட்டில் சரிந்து வரும் பிறப்பு விகிதம்! முழு விபரம்!

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகக் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இது, மாநிலத்தின் எதிர்கால மக்கள்தொகை மற்றும் பொருளாதார நிலைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் மக்கள்தொகை சீராகப் பராமரிக்கப்பட வேண்டுமெனில், மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) 2.10 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 1.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த […]

August 4, 2025 admin
ஆடிப்பெருக்கு: நீர், பண்பாடு, மற்றும் நம்பிக்கையின் சங்கமம்! Exclusive

ஆடிப்பெருக்கு: நீர், பண்பாடு, மற்றும் நம்பிக்கையின் சங்கமம்!

ஆடி மாதம், தமிழ் மாதங்களில் ஒன்று, அதன் 18-ம் நாளில் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான விழா, ஆடிப்பெருக்கு. இது வெறும் சடங்கு அல்ல; நீர், இயற்கை, பண்பாடு, மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் ஒரு அழகிய கலவை. இந்த விழா, தமிழகத்தின் நீர்வளம் பெருகும் ஒரு முக்கியமான நிகழ்வைக் கொண்டாடுகிறது. 18-ன் சிறப்பு: ஒரு புனித எண் ஆடிப்பெருக்கின் சிறப்பே அதன் கொண்டாட்ட நாள். ஆடி 18-ம் நாள். இந்த 18 என்ற எண்ணுக்கு ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும் தனி […]

August 3, 2025 admin
மெட்ரோவில் புகையிலையுடன் பயணமா? இனி அபராதம் உறுதி! Exclusive

மெட்ரோவில் புகையிலையுடன் பயணமா? இனி அபராதம் உறுதி!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மெட்ரோ ரயில்களிலும் அதன் நிலையங்களிலும் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டின் காரணமாக பொதுச் சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகவும், பயணிகளிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் CMRL தெரிவித்துள்ளது. முக்கிய அமலாக்க நடவடிக்கைகள்: தீவிர ரோந்து மற்றும் உடல் சோதனைகள்: மெல்லும் புகையிலைப் பொருட்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால், நெரிசல் இல்லாத நேரங்களில் ரோந்துப் […]

July 30, 2025 admin
பிரதமர் மோடி  தூத்துக்குடியில் நடத்திய முழு உரை விபரம் இதோ! Exclusive

பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடத்திய முழு உரை விபரம் இதோ!

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ- 321 ரக விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 17 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கன்ட்ரோல் டவர், தீயணைப்பு […]

July 27, 2025 admin
உடனடி செய்திகள்