Exclusive
நெல்லையில் பிரம்மாண்ட ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு!
தமிழ்நாட்டின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில், நெல்லை அருகே 13 ஏக்கர் பரப்பளவில், ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த ‘பொருநை அருங்காட்சியகத்தை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த அரிய பொக்கிஷங்களின் சங்கமமாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கட்டடக்கலையும் வசதிகளும்: சுமார் 54,296 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வளாகம், உள்ளூர் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் முற்றம் மற்றும் தாழ்வாரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]