🔥அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடியாரின் சூளுரை: ‘திமுகவை அகற்ற 210 இடங்களில் வெல்வோம்’!
சென்னை, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சியின் அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அவர்களின் மறைவையொட்டி, முன்னாள் அமைச்சர் பொன்னையன் அவர்கள் ஒருமனதாகப் புதிய அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறப்புரையாற்றிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், தனது உரை முழுவதும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற உறுதியான சூளுரையையும் (vow) தொண்டர்கள் மத்தியில் முழக்கமிட்டார். அவரது இந்த உரை, தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி, அடுத்தகட்ட தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டியாக அமைந்தது.

எடப்பாடி பழனிசாமியின் சூளுரை:
தனது உரையில், இபிஎஸ் அவர்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சூளுரைத்தார். இந்த வெற்றியைக் “எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என்றும் அவர் முழங்கினார். திமுக ஆட்சியின் குறைகள், ஊழல்கள், மக்கள் விரோதத் திட்டங்களை நிறுத்தியது, பொய் வாக்குறுதிகள் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தார்.
1. தீயசக்தி திமுகவை அகற்றுவதே இலக்கு
-
“எனக்கு முன்னாள் பேசியவர்கள் அடுத்தாண்டு தேர்தல் குறித்துத் தெளிவாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். தீயசக்தி திமுகவை அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார்.”
-
அம்மாவின் ஆட்சி அமைதி, வளம், வளர்ச்சி எனும் கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொடுத்தது. மகளிருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அற்புதமான திட்டங்கள் கிடைத்தன.
-
அதிமுகவை எவராலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஏனெனில் இருபெரும் தலைவர்களும் (எம்ஜிஆர், அம்மா) மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை வழங்கியதால்தான்.
2. சட்டமன்றத்தில் திமுகவின் அராஜகம் குறித்த குற்றச்சாட்டு
-
பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டுவரும்போது ஸ்டாலினும், திமுகவினரும் சபாநாயகரைத் தள்ளிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். என் மேஜை மீது திமுக எம்.எல்.ஏக்கள் டான்ஸ் ஆடினார்கள்.
-
“அப்படிப்பட்ட கொடுமைகளை ஏற்படுத்தியவர் ஸ்டாலின். அதையெல்லாம் மீறி வென்றதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில் திரிந்தவர்தான் ஸ்டாலின்.”
-
“ஸ்டாலின் அவர்களே அன்று சட்டையை மட்டும்தான் கிழித்தீர்கள், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், அப்போது எந்த நிலையில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை.”
3. 210 இடங்கள் வெற்றி குறித்த நம்பிக்கை விளக்கம்
-
தலைமைக் கழக நிர்வாகிகள் குறிப்பிட்டது போல, வெறுமனே 2 லட்சம் வாக்குகளை 43 தொகுதிகளில் இழந்தோம், அதனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.
-
சமீபத்திய தேர்தல் தரவுகள்: நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வேறு விதமாக வாக்களிப்பார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.
-
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், நிலக்கோட்டை போன்ற தொகுதிகளில் நாடாளுமன்றத்தில் திமுக வென்றபோதும், சட்டமன்றத்தில் அதிமுகவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
-
-
வெற்றிக்கான கணிதம்: 2024 மக்களவைத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளைச் சேர்த்தால் 41.33%.
-
இந்த வாக்கு சதவீதக் கணக்குப்படி, 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இந்த இடங்களில் வெற்றி உறுதி.
-
மேலும், 15 தொகுதிகளில் 1% வாக்குதான் குறைவு, 18 தொகுதிகளில் 1 முதல் 2% வாக்குகள் தான் குறைவு.
-
-
“வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும். இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.”
4. திமுகவின் பொய் வாக்குறுதிகள் மற்றும் செயலற்ற ஆட்சி
-
திமுக கவர்ச்சிகரமாக 525 அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்து, நான்கில் ஒரு பங்கு அறிவிப்பைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.
-
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்: கல்விக்கடன் ரத்து இல்லை, கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை, பெட்ரோல் டீசல் மானியம் குறைக்கப்படவில்லை, நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
-
அரசு மற்றும் அரசு சார்ந்த காலிப் பணியிடங்கள் 5.5 லட்சம் நிரப்பப்படும் என்று கூறி, வெறும் 50 ஆயிரம் பேரை மட்டுமே நிரப்பினர்.
-
அதிமுக திட்டங்கள் நிறுத்தம்: தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற மக்களுக்கு நன்மை பயக்கும் அதிமுகவின் திட்டங்களை நிறுத்தியதுதான் அவர்களின் சாதனை.
5. உரிமைத் தொகை வழங்கியதில் அரசியல்
-
“குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்” என்று ஸ்டாலின் சொல்கிறார். அதிமுகவின் அழுத்தம் காரணமாகத்தான் வேறு வழியின்றி 28 மாதம் கழித்து உரிமைத் தொகை கொடுத்தார்.
-
“இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். வெறும் நான்கு மாதங்கள் தான் கொடுக்க முடியும். அடுத்தாண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்.”
-
“நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஓட்டு மட்டும் அதிமுகவுக்குத்தான் போடுவார்கள்.”
6. நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மக்கள் கஷ்டங்கள்
-
விலைவாசி உயர்வு: அரிசி, பருப்பு, எண்ணெய், கட்டுமானப் பொருட்கள் என எல்லாம் உயர்ந்துவிட்டதால் ஏழை மக்கள் ரத்தம் உறிஞ்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
மின் கட்டணம்: மின்கட்டணத்தை சுமார் 52% உயர்த்திவிட்டனர், ஆண்டுக்கு 5% உயர்த்துகிறார்கள்.
-
வரி உயர்வு: வீட்டு வரி 100%, கடை வரி 106%, குடிநீர் வரி, குப்பை வரி என எல்லாவற்றையும் உயர்த்திவிட்டனர்.
-
விவசாயிகள் பாதிப்பு: டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், மழையில் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
-
உடல் உறுப்பு ஊழல்: “நெசவாளர்கள் வறுமையில் வாடி, உடல் உறுப்புகளை விற்கும் நிலை வந்துவிட்டது. திமுக எம்.எல்.ஏ நடத்தும் மருத்துவமனையில் வறுமையில் வாடும் தொழிலாளர்களின் கிட்னியை முறைகேடாகப் பெற்றது பற்றி இதே திமுக அரசு விசாரித்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.”
7. ஊழல் பட்டியல்: திமுகவே ஊழலின் மறு உருவம்
-
“திமுகவுக்கு கலெக்சன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் தாரகமந்திரம்.”
-
அமலாக்கத்துறை விசாரணை: நகராட்சித் துறை ஊழலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்.
-
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: பொன்முடி (சொத்துக் குவிப்பு), செந்தில் பாலாஜி, துரைமுருகன் (மணல் ஊழல்), நேரு (வேலைவாய்ப்பு ஊழல்), அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, ராஜகண்ணப்பன், சக்கரபாணி, சிவசங்கர் எனப் பல அமைச்சர்கள் ஊழல் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
-
பிடிஆர் ஆடியோ: உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று பிடிஆர் ஆடியோ வெளியிட்டார். இதெல்லாம் அதிமுக ஆட்சியில் தோண்டியெடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
3. AIADMK General Council Meeting Resolutions – 10.12.2025
8. கூட்டணி குறித்த விளக்கம் மற்றும் தேர்தல் வியூகம்
-
அதிமுக யாருக்கும் அடிமையில்லை: “திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி என்று ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.” முரசொலியில் கருணாநிதியே பாஜக நல்ல கட்சி என்று சொன்னதைச் சுட்டிக் காட்டினார்.
-
திமுக தான் காங்கிரஸுக்கு அடிமை: 2011ல் சிபிஐ ரெய்டு மூலம் மிரட்டி கூட்டணி வைத்தது திமுகதான்.
-
வாக்காளர் பட்டியல் முறைகேடு: இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் என முறைகேடான பல லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவர்களை விடுவிக்காமல் அடுத்தாண்டு தேர்தலில் இந்த வாக்குகளை வைத்து வெற்றி பெறலாம் என்றுதான் ஸ்டாலின் துடிக்கிறார்.
-
கூட்டணி அமைப்பு: “அதிமுகவைப் பொறுத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி. ஆனால், திமுக மக்கள் பலம் இழந்த கட்சி. வழக்கம்மாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கப்படும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்.”
9. தொண்டர்களுக்கு வேண்டுகோள்
-
“அடுத்தாண்டு தேர்தலில் இங்கே வந்திருக்கும் பல நிர்வாகிகள் வேட்பாளர்களாக வாய்ப்புண்டு, விசுவாசமாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.”
-
“தேனீக்கள், எறும்பை போல சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டும். நமக்கு விழக்கூடிய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் வகையில் தேர்தல் நேரத்தில் மக்களை அழைத்து வந்து ஓட்டு போடச் செய்யுங்கள்.”
நிலவளம் ரெங்கராஜன்



