32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 49 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 49)
சண்டிகர் மேயர் தேர்தல்: மீண்டும் வாக்கு எண்ணிக்கை  நடத்த உத்தரவு! Exclusive

சண்டிகர் மேயர் தேர்தல்: மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என்றும் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச்சீட்டுகளை செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதிவான 8 ஓட்டுகள் செல்லும் எனவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவி்ட்டுள்ளது. சண்டிகர் மாநகராட்சிக்கு […]

February 20, 2024 admin
திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்! Exclusive

திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்!

“நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ அல்லது அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல […]

February 20, 2024 admin
தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்  முக்கிய அம்சங்கள்! Exclusive

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் மகளிர் உரிமைத் தொகை, கல்வி, இளைஞர் நலன், போக்குவரத்து துறை, சமூக நலத்துத்துறை, மருத்துவத்துறை, மெட்ரோ திட்டம் என பல்வேறு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும், தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது […]

February 19, 2024 admin
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்க தடை! Exclusive

தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

பொருட்காட்சி, திருமண மண்டபங்கள், பெரிய கடைகள், கடை வீதிகள், சர்க்கஸ் நடக்கும் இடங்களில் மேகத்தைக் கொஞ்சமாகப் பிய்த்து அதற்கு ‘ரோஸ்’நிறத்தை ஏற்றிய ஒரு மிட்டாயைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குச்சியில் அழகாகச் சுற்றியோ பாக்கெட்டில் அடைத்தோ தருவார்கள். வாயில் போட்டால் கரைந்து போகும் அந்தத் திகட்டாத இனிப்புதான் பஞ்சு மிட்டாய்! இந்த பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் புற்றுநோயை உருவாக்கும் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை, தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்க அரசு தடை விதித்துள்ளது. அந்தக் காலம் […]

February 17, 2024 admin
சென்னை மெட்ரோ ரயிலில்  பெண்களின் பாதுகாப்புக்காக  ‘Pink Squad’அறிமுகம்!. Exclusive

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களின் பாதுகாப்புக்காக ‘Pink Squad’அறிமுகம்!.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘Pink Squad’-ஐ இன்று (15.02.2024) நந்தனம் அண்ணாசாலையில் உள்ள மெட்ரோஸில் அறிமுகப்படுத்தியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் .மு.அ.சித்திக், இ.ஆ.ப., முன்னிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் (CISB Services) ‘Pink Squad’ பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில், […]

February 15, 2024 admin
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ & தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்! Exclusive

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ & தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மோடி தலைமையிலான மத்திய அரசு அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பாண்டின் கூட்டதொடர் பிப். 12 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் […]

February 14, 2024 admin
எக்ஸ் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை-  விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு! Exclusive

எக்ஸ் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை- விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு!

கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த தண்டனையை எதிர்த்து […]

February 12, 2024 admin
சட்டசபையில் கவர்னர் பேசியதென்ன? சபாநாயகரின் பதிலடி என்ன? முழு விபரம்! Exclusive

சட்டசபையில் கவர்னர் பேசியதென்ன? சபாநாயகரின் பதிலடி என்ன? முழு விபரம்!

தமிழக சட்டப் பேரைவில் இன்று உரையாற்றிய கவர்னர் , “பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்”எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து […]

February 12, 2024 admin
பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும் !- பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆவேசம்! Exclusive

பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும் !- பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். முன்னதாக சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் நட்டா சுவாமி தரிசனம் செய்தார், அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண […]

February 11, 2024 admin
மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை போக்குவரத்து மாற்றம்! Exclusive

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை போக்குவரத்து மாற்றம்!

சிங்காரச் சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிக்காக இன்று முதல் (பிப்.11) அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலைகளில் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு விபரம்: கீழ்கண்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய […]

February 11, 2024 admin
உடனடி செய்திகள்