32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 26 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 26)
திருவண்ணாமலை :கார்த்திகை தீபத்திருவிழாக் கொடியேற்றம்! Exclusive

திருவண்ணாமலை :கார்த்திகை தீபத்திருவிழாக் கொடியேற்றம்!

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை […]

December 4, 2024 admin
மழை வரும் முன்னே செய்ய வேண்டியது இதுதான்! Exclusive

மழை வரும் முன்னே செய்ய வேண்டியது இதுதான்!

மழை வெள்ளத்துக்கும் எங்கள் வீட்டுக்கும் நாற்பதாண்டு கால நட்பு. தார்சாலைகள் உயரமாகி வீட்டு வாசலின் 3 படிகளை விழுங்கிவிட்டதால், சின்ன மழைக்கே ஹலோ கூட சொல்லாமல் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். இந்த வருடம் முன்னெச்சரிக்கையாக சுற்றுச்சுவரை உயரப்படுத்தினோம். தெருவில் ஓடிய மழை நீர் உள்ளே பாயவில்லை. ஆனால் மொசைக் தரையிலிருந்து ஊற்றெடுத்து வீடு முழுக்க நீர். கடும் ஜுரத்துடன் தற்காலிக கொத்தனாராக மாறி, ஊற்றெடுத்த பகுதிகளை அடைத்தேன். ஆனால் கிச்சனில் அடைத்தால் ஹாலில் தண்ணீர் கொப்பளித்தது. ஹாலில் […]

December 1, 2024 admin
பெஞ்சல் புயல் எதிரொலி: நகைக்கடைகள், தியேட்டர்கள் மூடல்! Exclusive

பெஞ்சல் புயல் எதிரொலி: நகைக்கடைகள், தியேட்டர்கள் மூடல்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் கன மழை கொட்டி வருகிறது.வங்கக் கடல் அருகே நிலவி வந்த பெஞ்சல் புயலின் முன் பகுதி கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தரையைத் தொட்டதில் இருந்து 3- 4 மணி நேரம் முழுமையாக கரையைக் கடக்க ஆகும் என சொல்லப்படுகிறது. அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், […]

November 30, 2024 admin
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் தரம் குறைவு! Exclusive

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் தரம் குறைவு!

பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளம், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம், 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 […]

November 28, 2024 admin
மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை தமிழகம் எதிர்ப்பது ஏன்? Exclusive

மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை தமிழகம் எதிர்ப்பது ஏன்?

விஸ்வகர்மா திட்டத்தை வெறுமனே ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியில் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று கூறுவோர் கவனத்திற்காக, இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள மாற்றங்கள் பற்றிய சில குறிப்புகளை இங்கே பகிர விரும்புகிறேன். 1. கட்டாயமாக பாரம்பரிய குடும்பத்தொழிலாக குறிப்பிட்ட தொழிலை கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு தகுதி படைத்தோர் தங்களுக்கு விருப்பமான தொழில்களை மேற்கொள்ள வழிவகை செய்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் ரீதியான சமூக அழுத்தம் ஏற்படுவதை […]

November 28, 2024 admin
சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை! Exclusive

சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை!

70 வயது மூத்த குடிமக்​களுக்காக ரூ.5 லட்சம் மதிப்​பிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், எவ்வித வருமான வரம்புமின்றி அரசு மற்றும் தனியார் மருத்​துவ​மனை​களில் கட்டணமின்றி சிகிச்சை பெறமுடி​யும். ஆனால், தமிழகத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் பயன்பாட்டுக்கு வராததால், இத்திட்​டத்தில் காப்பீடு அட்டை பெற்றும் மூத்த குடிமக்​களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்​டுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் […]

November 25, 2024 admin
“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் இலவசமாக கார் டிரைவர் பயிற்சி! Exclusive

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் இலவசமாக கார் டிரைவர் பயிற்சி!

வாகன ஓட்டுநர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுநர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. 45 நாள் இலகுரக வாகனம், கனரக வாகனம் மற்றும் 30 நாள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 8வது, 10வது அல்லது 12வது வகுப்பு தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் […]

November 24, 2024 admin
தத்தளிக்கும் திருவண்ணாமலை! தமிழகம்

தத்தளிக்கும் திருவண்ணாமலை!

அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்மணி தினத்தன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நிலைமாறி கடந்த 4 வருடங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பக்தர்கள் வந்து குவிகிறார்கள். அதிலும் மாற்றமாக கடந்த சிலமாதங்களாக வாரம் முழுவதும்மே பக்தர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். பகல் நேரத்தைவிட மாலை, இரவு நேரங்களில் கிரிவப்பாதை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது, நகரம் தத்தளிக்கிறது.வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் மாடவீதியை சுற்றியே […]

November 24, 2024 admin
2025ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு விபரம்! Exclusive

2025ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு விபரம்!

வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மொத்தம் 5 நாட்கள் உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி விடுமுறையுடன் 2025ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 24 நாள்களில், 3 ஞாயிறும் அடங்கும். 24 […]

November 22, 2024 admin
‘லவ்வர்ஸ் கட்டிப்பிடித்து முத்தமிடுவது இயல்பே’ – ஐகோர்ட் தீர்ப்பு! Exclusive

‘லவ்வர்ஸ் கட்டிப்பிடித்து முத்தமிடுவது இயல்பே’ – ஐகோர்ட் தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்மை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் காதலிக்கும் போது, இளைஞர் தம்மை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக அந்த பெண் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் இளைஞர் மீது ஐபிசி 354ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். […]

November 15, 2024 admin
உடனடி செய்திகள்