பெஞ்சல் புயல் எதிரொலி: நகைக்கடைகள், தியேட்டர்கள் மூடல்!

பெஞ்சல் புயல் எதிரொலி: நகைக்கடைகள், தியேட்டர்கள் மூடல்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் கன மழை கொட்டி வருகிறது.வங்கக் கடல் அருகே நிலவி வந்த பெஞ்சல் புயலின் முன் பகுதி கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தரையைத் தொட்டதில் இருந்து 3- 4 மணி நேரம் முழுமையாக கரையைக் கடக்க ஆகும் என சொல்லப்படுகிறது.

அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

டிச.1-ம் தேதி, கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். டிச.2-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று புயல் கரையைக் கடக்கின்றபோது, திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் தியேட்டர்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதாலும், நகைக்கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!