32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 15 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 15)
அண்ணா பல்கலை.,மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு! Exclusive

அண்ணா பல்கலை.,மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை […]

May 28, 2025 admin
தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபை தேர்தல்! Exclusive

தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபை தேர்தல்!

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, அன்புமணி ராமதாஸ், வில்சன் உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபை உறுப்பினர்கள் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் என். சந்திரசேகரன், ம.தி.மு.க.வின் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இந்த நிலையில் காலியாக […]

May 26, 2025 admin
சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே  அபராதம்- போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு. Exclusive

சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்- போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு.

நாடெங்கும் சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பிரதான சாலைகளில் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் 5 வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே […]

May 21, 2025 admin
50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தை- ராமதாஸ்! Exclusive

50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தை- ராமதாஸ்!

பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமயில் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர்.ஆனாலும் பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார் பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே […]

May 16, 2025 admin
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை! Exclusive

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி அருளானந்தம் உள்பட 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என்று இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு முக்கிய வழக்காகும். இது கோயம்புத்தூர் மாவட்டம், […]

May 13, 2025 admin
மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்! Exclusive

மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்!

சென்னையின் மெரினா கடற்கரை, இந்தியாவின் மிக நீளமான மற்றும் உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாகும். இது வங்காள விரிகுடாவில், புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து பெசன்ட் நகர் வரை சுமார் 13 கி.மீ நீளத்தில் பரவியுள்ளது. இந்த கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் விளங்குகிறது. தற்போது, மெரினா கடற்கரையை சர்வதேச தரத்தில் உயர்த்தி, நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த […]

May 1, 2025 admin
மயோனைஸுக்கு ஓராண்டு தடை:  தமிழக அரசு உத்தரவு! -ஏன்? Exclusive

மயோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு! -ஏன்?

மயோனைஸ்.. இந்த பெயர் இன்று அனைவருக்கும் பரிச்சயமானது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த உணவகத்திற்கும் சென்று மிருதுவான உணவை ஆர்டர் செய்தாலும், “கொஞ்சம் எக்ஸ்ட்ரா மயோனைஸ்” என்று காட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.இது வெள்ளை நிறத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும். மேலும், இந்த மயோனைஸ் முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, தயார் செய்யப்படும் கலவையாகும்.துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மயோனைஸ் பற்றி சொல்லி தெரிய தேவையில்லை. […]

April 24, 2025 admin
‘பொறுப்பே போ.. போ..!’- மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பை உதறினார் துரை வைகோ! Exclusive

‘பொறுப்பே போ.. போ..!’- மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பை உதறினார் துரை வைகோ!

மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான மோதலை தொடர்ந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்”இதுதொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக […]

April 19, 2025 admin
தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி! – முழு விபரம்! Exclusive

தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி! – முழு விபரம்!

தமிழ்நாடு, சமீப காலங்களில் விண்வெளித் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அக்டோபர் 2023-ல் தமிழக அரசாங்கம் தனது முதல் விண்வெளித் தொழில் கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கை விண்வெளித் துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், தமிழ்நாட்டை இந்தியாவின் விண்வெளித் தொழில் மையமாக உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து இன்று தமிழ்நாடு அமைச்சரவை 2025-ஆம் ஆண்டு விண்வெளி தொழில் கொள்கையை (Tamil Nadu Space Industrial Policy 2025) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை விண்வெளி துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், […]

April 17, 2025 admin
இதென்ன இருட்டுக்கடைக்கு வந்த சோதனை! Exclusive

இதென்ன இருட்டுக்கடைக்கு வந்த சோதனை!

திருநெல்வேலியின் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா, சுற்றுலாப் பயணிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரையும் கவர்ந்த இனிப்புப் பண்டம். 1940-களில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங்கால் தொடங்கப்பட்ட இந்தக் கடை, தற்போது அவரது மூன்றாம் தலைமுறையினரால் நடத்தப்படுகிறது. மின்விளக்குகள் குறைவாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டதால் “இருட்டுக்கடை” என்ற பெயர் வந்தது. இந்தக் கடையின் முந்தைய உரிமையாளர் ஹரிசிங், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், அவரது மனைவி கவிதா சிங் கடையை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மகள் […]

April 16, 2025 admin
உடனடி செய்திகள்