சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்- போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு.

சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே  அபராதம்- போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு.

நாடெங்கும் சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பிரதான சாலைகளில் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் 5 வகையான விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்,

இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட (நோ என்ட்ரி) பகுதியில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts