32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 138 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 138)
மோடி பங்கேற்கும் இணையவழி நிகழ்ச்சி: ரஜினிக்கு அழைப்பு! தமிழகம்

மோடி பங்கேற்கும் இணையவழி நிகழ்ச்சி: ரஜினிக்கு அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா- 2020’ இணையவழியில் (யூ-டியூப்) டிச.11ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.பாரதியார் பிறந்த நாளான டிச.11-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, […]

December 10, 2020 admin
மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால்..? – புதியக் கட்சி நிறுவனர் அணில் குமார் வாக்குறுதிகள்! தமிழகம்

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால்..? – புதியக் கட்சி நிறுவனர் அணில் குமார் வாக்குறுதிகள்!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளை யின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார். தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, […]

December 10, 2020 admin
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட தடை தொடரும் –சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முழு விபரம்! தமிழகம்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட தடை தொடரும் –சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

தமிழக அளவில் பெரும் சர்ச்சையக் கிளப்பிய சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலம் செல்லும் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக 1956-ஆம் ஆண்டு தேசிய பெருவழிகள் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த அறிவிக்கையின் அடிப்படையில் நிலங்களை தேசிய பெருவழி ஆணையம் தன் உடமை ஆக்குவதற்கு முன்பு விவசாயிகளின் நில ஆவணங்களை திருத்த உத்தரவிட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இந்த உத்தரவு காரணமாக […]

December 8, 2020 admin
ஊட்டி மலை ரயில் வாடகை – ரயில்வே துறைக்கு கமல்ஹாசன் கண்டனம் தமிழகம்

ஊட்டி மலை ரயில் வாடகை – ரயில்வே துறைக்கு கமல்ஹாசன் கண்டனம்

ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன் மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர் களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமை உருவாகலாமா? என்று கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் மாநில மற்றும் மாவட்ட வருவாயைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலங்கள்,பூங்காக்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனினும் […]

December 8, 2020 admin
மு.க.ஸ்டாலின் & ஆ.ராசா பேச்சு சரியில்லை – டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை! தமிழகம்

மு.க.ஸ்டாலின் & ஆ.ராசா பேச்சு சரியில்லை – டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து ஆ.ராசா சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகரிக அரசியலுக்கும் தி.மு.கவுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண்ணான, ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள், அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் […]

December 7, 2020 admin
காலவரையற்ற வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு! தமிழகம்

காலவரையற்ற வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாமக்கல் நகரில் கடந்த 1946-ஆம் ஆண்டில் சிலர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு லாரியை வாங்கி உள்ளனர். அந்த லாரியில் அவர்களே ஓட்டுநர்களாகவும் பணியாற்றியுள்ளனர். பின்னர், அவர்களைப் பார்த்து சிலர் லாரி தொழிலுக்கு வந்துள்ளனர். படிப்படியாக லாரி தொழில் இந்த மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது. கடந்த 1960-ஆம் ஆண்டு முதல் இந்த தொழில் நாமக்கல் மாவட்டத்தில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக லாரி கூண்டு கட்டும் தொழில், பழுதுநீக்கும் தொழிலகம், பெயிண்ட் பட்டறை, முகவர் அலுவலகம் […]

December 7, 2020 admin
ஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்!- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை! தமிழகம்

ஜெயலலிதா படம் முன் அகல் விளக்கேற்றி வீரசபதம்!- ஈ பி எஸ் & ஓ பி எஸ் கூட்டறிக்கை!

அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வெல்ல நாளை மாலை அம்மாவின் படத்தின் முன்பு அகல விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம் என்று அண்ணா தி.மு.க. தொண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். நாளை ஜெயலலிதாவின் நினைவு நாள். இதையொட்டி அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப் பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப் பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடலில் […]

December 4, 2020 admin
புரெவி புயல்:  6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை! தமிழகம்

புரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை!

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் நாளை (டிச-04) 6 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று (3.12.2020) மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.  இப்புயல், (04-12-2020) அன்று அதிகாலையில் பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  விடுத்துள்ளது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, […]

December 3, 2020 admin
வரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி!- ரஜினி ஓப்பன் வாய்ஸ்! தமிழகம்

வரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி!- ரஜினி ஓப்பன் வாய்ஸ்!

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலான தாமதங்கள், தயக்கங்கள், குழப்பங்கள் ஆகிய வற்றைத் தாண்டி ஒருவழியாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக (மறுபடியும்) அறிவித்து உள்ளார். இது குறித்து இன்று திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என்றும் மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் மற்றும் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’என்கிற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.அத்துடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக […]

December 3, 2020 admin
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது! தமிழகம்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது!

சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை […]

December 2, 2020 admin
உடனடி செய்திகள்