+2 ரிசல்ட் வெளியானது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்!

+2 ரிசல்ட் வெளியானது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்டார்!

மிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்களை இன்று (ஜூலை 19ஆம் தேதி ) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

+2 மாணவ மாணவியரின் மதிப்பெண் பட்டியல் ஜூலை 19ம் தேதி வெளியிடப்படவுள்ளது என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் 16-7-2021 அன்று அறிவித்திருந்தது. 2020 – 21ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12ம் வகுப்பு) பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதன் படி 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரம் (19.07.2021) இன்று காலை 11.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தேர்வு துறை அலுவலகத்தில் வெளியிட்டார்

பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் மகேஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது.

பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சியடைந்துள்ளனர். 551 முதல் 599 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 30,600 .

+2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களை எந்த மாணவரும் எடுக்கவில்லை.

+2 மதிப்பெண்ணில் அதிருப்தி அடைந்த மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

மதிபெண்ணில் திருப்தியில்லாத மாணவர்களுக்கு தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரொனோ தொற்று பாதுகாப்பு சூழலை பொருத்து நடைபெறும்.

11ம் வகுப்பில் அரியர் வைத்த 33 ஆயிரத்து 557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார்.

+2 மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

1. www.tnresults.nic.in

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

4. www.dge.tn.gov.in

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்

பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

என தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!