சென்னை -புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, கப்பல் போக்குவரத்து சேவை!

சென்னை -புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, கப்பல் போக்குவரத்து சேவை!

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்…கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம். இச்சூழலிதான் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி வழியாக காரைக்காலுக்கு பயணிகள் படகு சென்று திரும்பும். இந்த படகுப்போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகம் திட்டமிட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, ” இந்திய அளவில் பிஸியாக இருக்கும் சென்னை துறைமுகத்தில் ‘ரோரோ, ரோபேக்ஸ்’ என்ற கப்பல் சேவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு பொருட்களுடன் கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில் பயணியரும் செல்லலாம். இந்த வசதியை மற்ற துறைமுகங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில், கப்பலை இயக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

நம் சென்னை துறைமுகத்திற்கு பல பயணியர் கப்பல் வந்து செல்கிறது. புதுச்சேரியிலும் 4 மீ., ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது.கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீ., நீளத்தில், கப்பல் நிறுத்துமிடம், செப்டம்பரில் தயாராகி விடும். இதில் 120 மீ., நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம். அதே போல், காரைக்கால் துறைமுகத்தில் 130 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்தும் தளம் உள்ளது. இங்கிருந்து கொழும்பு – காரைக்கால் – சென்னை கப்பல் போக்குவரத்தை இயக்கும் திட்டமும் உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, ரோரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து, நடந்த முதற்கட்ட ஆலோசனையில் விருப்பமுள்ள ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன.

ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின், ஆப்பரேட்டர்கள் விரைந்து வரும் பட்சத்தில், இந்த வசதி அடுத்த ஐந்து மாதத்தில் துவங்கும்.இதன் வாயிலாக, சென்னையில் இருந்து கப்பலில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். சாலை நெரிசலும் குறையும். துறைமுகங்களில் தேவையான வசதிகள் உள்ளன. எந்த மாதிரியான கப்பல் வருகிறது என்பதை பொறுத்து,இத்திட்டத்தின் பட்ஜெட் இறுதி வடிவம் பெறும்.

இந்த படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக படகில் 20 பேர் பயணம் செய்யலாம். கடல் வழி பயணத்தில் இயற்கை அழகையும் கடற்கரையோர நகரங்களையும் ரசித்தவாறு பயணிகள் செல்லலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. படகு போக்குவரத்து சேவைக்காக சென்னை – காரைக்கால் இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும் ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெறுவதாக சென்னை துறைமுக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த முதல் கட்ட திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இத்திட்டம் மற்ற கடற்கரை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts

error: Content is protected !!