32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 155 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 155)
எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா! Running News2

எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

இந்தியாவிலேயே சிறந்த தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் ஒருவரான எல்.வி.பிரசாத் பெயரை தெரியாத சினிமா ரசிகர் யாரும் இருக்க முடியாது. அவர் சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார். சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். […]

August 20, 2017 admin
12.12.1950 – டிரைலர் ரிலீஸ்! Running News2

12.12.1950 – டிரைலர் ரிலீஸ்!

இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘12.12.1950’  திரையுலக புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமிது. ஆம். தற்போதைய சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் ரஜினியின் பிறந்த நாளை பல்வேறுவிதமாகக் கொண்டாடிவரும் சூழலில் அவரது பிறந்த தேதியான 12.12.1950 என்பதையே படத்தின் தலைப்பாக வைத்து ரஜினி ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் விருந்து படைக்கவுள்ளார் செல்வா. தீவிர […]

August 20, 2017 admin
‘விவேகம்’ படச்  சான்ஸ் குறித்து விவேக் ஓபராய்! Running News2

‘விவேகம்’ படச் சான்ஸ் குறித்து விவேக் ஓபராய்!

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாராகியிருக்கிறது எனச் சொல்கிறது படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் […]

August 19, 2017 admin
பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்! Running News2

பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்!

பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் ஆனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி, ‘Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகிலும் கால்பதிக்க உள்ளார். பல […]

August 17, 2017 admin
விவேகம் – டிரைலர்  – என்ன  ஸ்பெஷல்? Running News2

விவேகம் – டிரைலர் – என்ன ஸ்பெஷல்?

அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள விவேகம் படத்தின் டிரைலர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியானது. சத்தியஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள படம் விவேகம். இதில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக்ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சிவா இயக்கி உள்ளார். இப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது.இப்படத்தின் […]

August 17, 2017 admin
ஆபத்தான  ஆன்லைன் கேம்களுக்குத் தடை! – மத்திய அரசு திட்ட வட்டம்! Running News2

ஆபத்தான ஆன்லைன் கேம்களுக்குத் தடை! – மத்திய அரசு திட்ட வட்டம்!

தற்கொலைக்கு தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. 50 நாட்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பிளேடால் கீறிக் கொள்வது போன்று பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கும் உத்தரவுகள் கொடுக்கப்படும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படும். இந்த விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கான இணைப்பை உடனடியாக […]

August 16, 2017 admin
உடனடி செய்திகள்