32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 102 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 102)
தமிழ் படம் 2 – விமர்சனம்! -கண்ணை மூடிக் கொண்டுப் பார்க்கலாம் Running News2

தமிழ் படம் 2 – விமர்சனம்! -கண்ணை மூடிக் கொண்டுப் பார்க்கலாம்

நம் சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அறுசுவை உணவுகளுக்கு அடுத்தபடியாக நகைச்‘சுவை’க்கு விசேஷ அந்தஸ்து கொடுப்பது வாடிக்கைதான். இதனை உணர்ந்தே நமது பழங்கால நகைச்சுவை நடிகர்கள் தமிழ்த் திரையில் மன நிறைவான நகைச்சுவைக் காட்சிகளை நமக்கு அளித்துச் சென்றனர். உதாரணத்துக்கு சிவகவி என்ற பழைய திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைக் கூறலாம். கல்யாணப்பரிசு- தங்கவேல், தில்லானா மோகனாம்பாள்- நாகேஷ், சபாஷ் மீனா -சந்திரபாபு , காசேதான் கடவுளடா- தேங்காய் சீனிவாசன் என […]

July 12, 2018 admin
சக்களத்திகளின் ஒற்றுமையை காட்ட வரும் ‘ வாய்க்கா தகராறு’ Running News2

சக்களத்திகளின் ஒற்றுமையை காட்ட வரும் ‘ வாய்க்கா தகராறு’

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்..இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்.. நாயகிகளாக வர்ஷிகா நாயகா ,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்..மற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்.. திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி. இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது ,சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், […]

July 11, 2018 admin
சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படம் – எம்பிரான்’ Running News2

சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படம் – எம்பிரான்’

தனது புதுமையான கதை சொல்லல்  மூலம் புதிய ‘திகில்’ மற்றும் ‘சஸ்பென்ஸ்-மிஸ்டரி’ வகை திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு  கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. நிச்சயமாக, அவரது முதல் படம் ‘முந்தினம் பார்த்தேனே’ மெல்லிய காதல் கதை, அதுவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது. தற்போது அவரது சிஷ்யரான கிருஷ்ணா பாண்டி இந்த அனைத்து வகை படங்களின் கலவையாக, தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘எம்பிரான்’, படத்தை ஒரு சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார். “உண்மையில், என்னை […]

July 11, 2018 admin
டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் புதுப்  படம் ‘இன்றையக் காதல்டா’ Running News2

டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் புதுப் படம் ‘இன்றையக் காதல்டா’

டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’. அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மயில்வாகனன் என்ற கேரக்டரில் தொலைக்காட்சி உரிமையாளராக நடித்தார். இந்நிலையில், ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். லேடி டானாக நமிதா இந்தப் […]

July 10, 2018 admin
விவசாயியாக நடித்த அனுபவம் எப்படி? கடைக்குட்டி சிங்கம் கார்த்தி பேட்டி! Running News2

விவசாயியாக நடித்த அனுபவம் எப்படி? கடைக்குட்டி சிங்கம் கார்த்தி பேட்டி!

யதார்த்த நாயகன் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக சயிஷா நடித்துள்ளார். கார்த்தியின் மாமன் மகள்களாக பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சத்யராஜ் மனைவிகளாக பானுப்ரியா, விஜி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தர ராஜா, மவுனிகா, யுவராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.விவசாயி வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அதுவும் மாதம் ஒன்றரை லட்சம் […]

July 10, 2018 admin
பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி !- இயக்குநர் பாக்யராஜ் பேச்சு ! Running News2

பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி !- இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ . இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். அவர் விழாவில் பேசும் போது,“இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச […]

July 8, 2018 admin
உடனடி செய்திகள்