டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் புதுப் படம் ‘இன்றையக் காதல்டா’

டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் புதுப்  படம் ‘இன்றையக் காதல்டா’

டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’. அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மயில்வாகனன் என்ற கேரக்டரில் தொலைக்காட்சி உரிமையாளராக நடித்தார்.

இந்நிலையில், ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார். ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்யப் போகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

இதையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள தமது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “இன்றையக் காதல்டா” என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசுகையில் ஒரு தலை ராகம் படத்தைக் குறிப்பிட்டு, அடுக்குமொழி வசனம் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரைக் குறிப்பிட்டு பேசிய டி.ராஜேந்தர், திடீரென டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கினார்.

யாரும் எதிர்பார்க்காத வேளையில் டிரம்ஸ் வாசித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறிய டி.ராஜேந்தர், தாம் தம் அடித்ததில்லை என்றும், ஆனால் டிரம்ஸ் அடிப்பேன் என்று கூறி மீண்டும் வாசித்தார்.தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு அவர் போலவே பேசியும் காண்பித்தார்.

சினிமாவில் ஒரு நடிகர் செய்வதை, ரசிகர்களும் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பிய டி.ராஜேந்தர், தமிழன் என்ற காரணத்தால் விஜய்க்கு சிக்கல் கொடுக்கப்படுகிறதா என்று கேட்டார். ஆனாலும் தனி மனித ஒழுக்கம் அனைத்து நடிகர்களுக்கும் தேவை. ஏன் விஜய் மீது மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது? விஜய் தமிழன் என்பதால் எதிர்க்கிரார்களா? புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்க முடியாது. முழுமையாக புகையிலையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தயங்குகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

error: Content is protected !!