32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1049 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1049)
ஆரோக்கியமாக வாழ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உணவு முறைகள்! Running News

ஆரோக்கியமாக வாழ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உணவு முறைகள்!

தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.நம் உணவு முறையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பதே போதுமானது. எனினும் பழக்கத்தை மாற்ற இயலாதவர்கள் மூன்று முறை உண்ணலாம். சாப்பிட்ட சாப்பாடு வெளிவரும் வண்ணம் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. வயிற்றில் பாதியளவு […]

February 24, 2014 admin
கூகுள் வழங்கும் – டேங்கோ 3டி ஃபோன் மற்றும் கூகுள் ஸ்மார்ட் வாட்ச்! Running News

கூகுள் வழங்கும் – டேங்கோ 3டி ஃபோன் மற்றும் கூகுள் ஸ்மார்ட் வாட்ச்!

கூகுள் ஒரு புது வகை பிராஜக்ட்டை துவக்கி இப்போது டெஸ்டிங்கில் உள்ளது. இதன் பெயர் பிராஜக்ட் டேங்கோ. இது உலகத்தின் முதல் 3டி மற்றும் 3டி சென்சார் உள்ள ஃபோன். இதன் மூலம் நிறைய சாதிக்க முடியும். இதற்க்கு மைராயிட்1 3டி சிப் பொருத்தபட்டிருக்கிறது. இதை பற்றி மேலும் நான் சொல்லுவதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து ஆனந்தமா இருங்க,……………. வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=Qe10ExwzCqk அத்துடன் கூகுள் ஸ்மார்ட் வாட்ச்சை இப்போது அறிமுகபடுத்த போகிறது இதுவும் டெஸ்ட் […]

February 24, 2014 admin
இந்த மாற்றங்களை விதைக்கும் விதைக்கும் லட்சியவாதி ஒரு தமிழ் பெண்ணாக்கும்! Running News

இந்த மாற்றங்களை விதைக்கும் விதைக்கும் லட்சியவாதி ஒரு தமிழ் பெண்ணாக்கும்!

கடந்த நவம்பர் 19 அன்று, பாரதிய மஹிளா வங்கி, மும்பையில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை ஏற்றுள்ள உஷா அனந்த சுப்பிரமணியன் ஒரு தமிழர். வங்கித் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இவர் அனைத்து மகளிர் வங்கியின் மூலம் பல புதுமையான விஷயங்களைச் செய்துவருகிறார். இது குறித்து கேட்ட போது,”கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்குக் கடன் வழங்கி உதவுவதும், பெண்களுக்கான சட்டப்பூர்வமான உரிமையை அவர்களுக்கு உணர்த்திடச் செய்வதுமே எனது முன்னுரிமை […]

February 24, 2014 admin
ஜெ. சினிமா நடிகையான கதை! Running News

ஜெ. சினிமா நடிகையான கதை!

இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம்மா என்று எத்தனையோ பட்டங்களால் அழைக்கப்பட்டாலும் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. 1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்தது என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் […]

February 24, 2014 admin
தானியங்கி உணவு விற்பனை இயந்திரம் – சென்னையில் அறிமுகம்! Running News

தானியங்கி உணவு விற்பனை இயந்திரம் – சென்னையில் அறிமுகம்!

’அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் நகரின் புகழ்பெற்ற உணவகங்களில் இருந்து உணவு வகைகளை முற்றிலும் தானியங்கி வினியோக நுணுக்கத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகத்தின் உணவு வகையை எளிதாக பயன்படுத்தும் தொடு திரையை பயன்படுத்தி தேர்வு செய்து, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்தினால், 90 விநாடிகளுக்குள் புதிய மற்றும் சூடான உணவு பாக்கெட்கள் கன்வேயர் பெல்ட் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஊழியரிடம் ரொக்கம் செலுத்தி ஃபுட்பாக்ஸ் கார்டைப் பெற்று, அதை […]

February 23, 2014 admin
’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது! Running News

’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது!

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம் தமிழ் தவிர ஹிந்தி , தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன் ‘ என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிற ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து […]

February 23, 2014 admin
எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம் Running News

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை – வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம். தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு […]

February 23, 2014 admin
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! – ராமதாஸ் கடிதம் Running News

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! – ராமதாஸ் கடிதம்

“தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டுவதற்கான திசையில் தமிழகம் சரியாக பயணிக்கிறது என்றால் 2014-15 ஆம் நிதியாண்டிற்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 258 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்காவது முதலீடு செய்யப்பட்டிருக்குமா? என்பது ஐயம் தான். வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பது பெரிய சாதனையல்ல. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான குறைந்தபட்ச முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி […]

February 23, 2014 admin
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி விட்ட தேர்தல் கமிஷன் கட்சிகளுக்கு வார்னிங்! Running News

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி விட்ட தேர்தல் கமிஷன் கட்சிகளுக்கு வார்னிங்!

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்து விட்டது.மாநில அரசுகளும் தேர்தல் அறிவிப்பை எதிர் கொள்ள தயார் ஆகி விட்டன.தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் களம் காண்பதில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளன.ஆக் ஓரிரு மாதங்களில் நடக்க போகும் பாராளுமன்றத் தேர்தலில் பணத்தை அத்துமீறி செலவளிக்கும் அல்லது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் […]

February 23, 2014 admin
கங்கையின் மாசு நீங்க ரூ.6500 கோடி செலவிட்டும் கொஞ்சமும் பிரயோஜமில்லையே! Running News

கங்கையின் மாசு நீங்க ரூ.6500 கோடி செலவிட்டும் கொஞ்சமும் பிரயோஜமில்லையே!

பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு […]

February 23, 2014 admin
உடனடி செய்திகள்