32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1031 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1031)
பா. ஜ.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு Running News

பா. ஜ.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடந்த தொகுதிப் பங்கீடு அறிவிப்பு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக சார்பில் ஜி.கே. மணி, அன்புமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரணும் ஆகியோர் பங்கேற்ற போது,பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் […]

March 20, 2014 admin
குஷ்வந்த் சிங் காலமானார் : Running News

குஷ்வந்த் சிங் காலமானார் :

முதுபெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளருான குஷ்வந்த்சிங் டெல்லியில் காலமானார். 99 வயதான குஷ்வந்த்சிங் 1915-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பில் பிறந்தவர். 1974-ம் ஆண்டு பத்மபூஷன் விருதைப் பெற்றவர் எழுத்தாளர் குஷ்வந்த் சிங். பொற்கோவில் நடவடிக்கையை கண்டித்து 1984ல் விருதை திரும்ப ஒப்படைத்து பரபரப்பை ஏற்படுத்திய சிங். 1980-1986 ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.கடைசிவரை வாழ்க்கையை புன்சிரிப்போடு எதிர்கொண்ட ஜர்னலிஸ்ட் குஷ்வந்த்சிங் மறைவிற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் ஒரு […]

March 20, 2014 admin
ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ‘ஆர்கானிக்’ புட்ஸ்! Running News

ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் ‘ஆர்கானிக்’ புட்ஸ்!

சென்னை தி.நகரில் உள்ள ‘தான்யம்’ ஆர்கானிக் கடையில் எப்போதும் ஏதோ ஒரு நட்சத்திர முகத்தைப் பார்க்கலாம். அவர்கள் சூர்யா, வைரமுத்து, சுசித்ரா, கவுதமி, லிசி ப்ரியதர்ஷன், ராதிகா, லட்சுமி என யாராகவும் இருக்கலாம்! ‘‘பிரபலங்களைக் குறி வச்சு ஆரம்பிச்ச கடையில்லை இது. இயற்கையோட உன்னதம் எல்லா மக்களுக்கும் போய்ச் சேரணுங்கிற நோக்கம்தான் காரணம்’’ என்கிறார் தான்யம் கடையின் உரிமையாளர் தென்றல்! ‘‘பிறந்து, வளர்ந்ததெல்லாம் புதுச்சேரி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு ஐ.டி. கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்கானிக் உணவு […]

March 20, 2014 admin
இணையதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வெளியிட புதிய விதிமுறை! Running News

இணையதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வெளியிட புதிய விதிமுறை!

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அரசியல் விளம்பரம் தொடர்பாக இந்த வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகள் அடங்கிய விரிவான வழிகாட்டு நெறிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக முக்கிய சமூக வலைதளங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி.”தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இன்டெர்நெட் அடிப்படையிலான அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களை இளைய தலைமுறையினர் […]

March 20, 2014 admin
காதலை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் ‘மறுமுனை’ ஆல்பம் Running News

காதலை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் ‘மறுமுனை’ ஆல்பம்

பிரபல பிரசன்ன ஜோதிடர் நெல்லை வசந்தனின் மகன் மாருதி சினிமாவில் ஹீரோவாகி விட்டார். மறுமுனை என்பதுதான் அவர் நடிக்கும் முதல் படம். மிருதுளா ஹீரோயின்.சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த எம்பிஎல் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை கே.பாக்யராஜ், பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிஸ்குமார் டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தை முழுக்க சேலம் மாவட்டத்திற்குள்ளேயே எடுத்து முடித்துள்ளனர். படம் குறித்து டைரக்டர் மாரிஸ் குமாரிடம் கேட்டபோது,” காதலுக்கு பெற்றவர்கள் எப்போதுமே எதிரியில்லை. வெளியில்தான் இருக்கிறார்கள். அந்த எதிரிகளால் நம் […]

March 20, 2014 admin
டெல்லியில் அரசியல் பிரமுகர்களை கடத்த திட்டம் ;பயங்கரவாதிகள் ஊடுருவல்! Running News

டெல்லியில் அரசியல் பிரமுகர்களை கடத்த திட்டம் ;பயங்கரவாதிகள் ஊடுருவல்!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், முக்கிய வேட்பாளர்கள் சிலரை கடத்தி சென்று அரசை மிரட்ட வாய்ப்புள்ளது என்றும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதி யாசின் பட்கலை விடுதலை செய்ய கூறி, பயங்கரவாதிகள் கோரிக்கை வைப்பார்கள் என்றும் இந்த சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி இயக்கத்தினர் இந்த செயலில் ஈடுபடக்கூடும் எனவும் மத்திய உளவு துறையினர் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்ப்பில் தொடர்ப்புடைய முக்கிய […]

March 19, 2014 admin
நானோ டெக்னாலஜி குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல் Running News

நானோ டெக்னாலஜி குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

சென்னை அருகே உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய குடையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஞ்ஞானி சிவதாணு பிள்ளை குடையை அறிமுகப்படுத்தினார். நானோ துகள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்குடை சூப்பர் ஹைட்ரோபோபிக் அல்ட்ரா-வயலட் எதிர்ப்பு சக்தி கொண்டது. இக்குடையை அப்பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ விஞ்ஞானம் மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். “தாமரை” தத்துவத்தை பின்பற்றி இக்குடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நானோ மையத்தை சேர்ந்த பிரிட்டா தெரிவித்துள்ளார். […]

March 19, 2014 admin
என்னைத் தோற்கடிக்க ராஜபக்சே சதி! – வைகோ பகீர்! Running News

என்னைத் தோற்கடிக்க ராஜபக்சே சதி! – வைகோ பகீர்!

“விருதுநகர் தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்கிறார்.மு.க.ஸ்டாலினும் என்னை தோற்கடிக்க திட்டம் வகுத்துள்ளதாக செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார். இந்த சதிகளை தகர்ப்போம்.” என்று மதிமுக பொதுச செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 10 தொகுதிகள் கேட்டோம். பின்னர் 9 […]

March 19, 2014 admin
பெண்குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கப் படவேண்டும்: யுனெஸ்கோ வலியுறுத்தல்! Running News

பெண்குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கப் படவேண்டும்: யுனெஸ்கோ வலியுறுத்தல்!

உலகலாவியக் கல்வி குறித்து யுனெஸ்கோ நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உலக அளவில் குழந்தைகளுக்கான கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.குறிப்பாக பெண்குழந்தைகளின் கல்வி புறக்கணிக்கப்பட்டால் அது தலைமுறை பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே பெண்குழந்தைகளின் கல்வி மிக அவசியமான ஒன்று என முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011ம் ஆண்டில் உலக அளவில் 3 கோடியே 10 லட்சம் பெண்குழந்தைகளின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 77 கோடியே 40 லட்சம் பேர் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 3ல் 2 […]

March 19, 2014 admin
கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துகிறார் வடிவேலு! – தெனாலிராமன் படத்திற்கு எதிர்ப்பு! Running News

கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துகிறார் வடிவேலு! – தெனாலிராமன் படத்திற்கு எதிர்ப்பு!

ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்தார். காமெடியுடன் சரித்திர கதையம்சத்தில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதே சாயலில் ‘தெனாலி ராமன்’ படத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.இதில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு நடித்து இருப்பதாகவும், […]

March 19, 2014 admin
உடனடி செய்திகள்