32°C
விளம்பரம்
Advertisement

நானோ டெக்னாலஜி குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

admin சேலம் Published: March 19, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்னை அருகே உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய குடையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஞ்ஞானி சிவதாணு பிள்ளை குடையை அறிமுகப்படுத்தினார். நானோ துகள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்குடை சூப்பர் ஹைட்ரோபோபிக் அல்ட்ரா-வயலட் எதிர்ப்பு சக்தி கொண்டது. இக்குடையை அப்பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ விஞ்ஞானம் மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
nano-umbrella-raincoat
“தாமரை” தத்துவத்தை பின்பற்றி இக்குடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நானோ மையத்தை சேர்ந்த பிரிட்டா தெரிவித்துள்ளார். தாமரை இலையில் விழும் தண்ணீர் மற்றும் மாசு கீழே விழுவது போல நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்குடையில் விழும் மழைநீர் அதில் ஒட்டிக் கொள்ளாமல் கீழே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹைட்ரோபோபிக் மற்றும் அல்ட்ரா-வயலட் ரே பில்டர் என்ற இரு வகை நானோ துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரிட்டா குறிப்பிட்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்