32°C
விளம்பரம்
Advertisement

காதலை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் ‘மறுமுனை’ ஆல்பம்

admin சேலம் Published: March 20, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பிரபல பிரசன்ன ஜோதிடர் நெல்லை வசந்தனின் மகன் மாருதி சினிமாவில் ஹீரோவாகி விட்டார். மறுமுனை என்பதுதான் அவர் நடிக்கும் முதல் படம். மிருதுளா ஹீரோயின்.சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த எம்பிஎல் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை கே.பாக்யராஜ், பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிஸ்குமார் டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தை முழுக்க சேலம் மாவட்டத்திற்குள்ளேயே எடுத்து முடித்துள்ளனர்.

படம் குறித்து டைரக்டர் மாரிஸ் குமாரிடம் கேட்டபோது,” காதலுக்கு பெற்றவர்கள் எப்போதுமே எதிரியில்லை. வெளியில்தான் இருக்கிறார்கள். அந்த எதிரிகளால் நம் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காத்தான் பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள். அந்த வெளி எதிரிகள் யார் என்பதை இந்தப் படத்தில் சொல்கிறேன். சேலம் மாவட்டத்தில் 60 லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலையின் அழகை இதுவரை யாரும் காட்டாத கோணங்களில் காட்டியிருக்கிறோம். எங்களுக்காக சிம்பு ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.” என்றார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்