32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1494 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 7)
உலகத் தற்கொலை தடுப்பு நாள் 2026:விழிப்புணர்வும் மனிதநேயப் பார்வையும்! Exclusive

உலகத் தற்கொலை தடுப்பு நாள் 2026:விழிப்புணர்வும் மனிதநேயப் பார்வையும்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலகத் தற்கொலை தடுப்பு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்கொலைகளைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானது என்பதையும், இது குறித்த மௌனத்தைக் கலைத்து வெளிப்படையாகப் பேசுவதன் அவசியத்தையும் இந்த நாள் உலகிற்கு உரக்கச் சொல்கிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் […]

September 10, 2026 admin
உலக அழகு தினம்: அகத்தின் பொலிவையும் இயல்பான அழகையும் போற்றும் நாள்! Exclusive

உலக அழகு தினம்: அகத்தின் பொலிவையும் இயல்பான அழகையும் போற்றும் நாள்!

அழகு என்பது வெறும் வெளிப்புறத் தோற்றத்திலோ அல்லது உடலமைப்பிலோ மட்டும் சுருங்கிவிடக் கூடிய ஒன்று அல்ல. அது ஒரு மனிதனின் எண்ணம், குணம், நம்பிக்கை மற்றும் இயற்கையோடு இயைந்து வாழும் நேர்மறை மனப்பான்மை ஆகியவற்றின் கூட்டுக்கலவையாகும். பண்டைய காலம் முதலே அழகு பற்றிய வரையறைகள் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டு வந்தாலும், உண்மையான அழகு என்பது அகத்தின் அழகே என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், அழகின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும், அழகுத்துறை சார்ந்த கலை மற்றும் அறிவியல் […]

September 9, 2026 admin
எழுத்தறிவு எனும் ஒளி: மனிதநேயம், பூமி மற்றும் வளம் காக்கும் புதிய பாதை! Exclusive

எழுத்தறிவு எனும் ஒளி: மனிதநேயம், பூமி மற்றும் வளம் காக்கும் புதிய பாதை!

அறிவின் திறவுகோலாகவும், மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தூணாகவும் விளங்குவது எழுத்தறிவாகும். எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். […]

September 8, 2026 admin
பிசியோதெரபி@இயன்முறை மருத்துவம்:உடலியக்க மீட்டெடுப்பும் நவீன வாழ்வியலும்! Exclusive

பிசியோதெரபி@இயன்முறை மருத்துவம்:உடலியக்க மீட்டெடுப்பும் நவீன வாழ்வியலும்!

உலக இயன்முறை மருத்துவ (பிசியோதெரபி) தினமின்று கொண்டாப்படுகிறது. உலகெங்கிலும் இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைப் போற்றவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று தான் உலக இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பு (World Confederation for Physical Therapy) உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அமைப்பின் தோற்ற நாளை நினைவுகூரும் வகையிலேயே, 1996 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 […]

September 8, 2026 admin
நீல வானம் நமது உரிமை: சர்வதேச சுத்தமான காற்று தினம் இன்று! Exclusive

நீல வானம் நமது உரிமை: சர்வதேச சுத்தமான காற்று தினம் இன்று!

இயற்கை மனிதனுக்கு வழங்கிய இலவசக் கொடைகளில் மிக முக்கியமானது சுத்தமான காற்று. நாம் சுவாசிக்கும் காற்றில் மாசுகள் கலக்கும்போது அது மனித உடலை மட்டுமல்லாமல், இந்த ஒட்டுமொத்த பூமிப் பந்தின் சமநிலையையும் சீர்குலைக்கிறது. இத்தகைய சூழலில், வளிமண்டலத்தைப் பாதுகாக்கவும், சுத்தமான காற்றின் அவசியத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த தினம், வளிமண்டல மாசுபாட்டைக் குறைக்கவும், […]

September 7, 2026 admin
பன்னாட்டுத் தொண்டு நாள் 2026! Exclusive

பன்னாட்டுத் தொண்டு நாள் 2026!

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பன்னாட்டுத் தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. மனித நேயத்தையும், பிறருக்கு உதவும் நற்பண்பையும் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் விழிப்புணர்வாகக் கொண்டு சேர்ப்பதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும். மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே பிற உயிர்களுக்கு இரங்குதலும், எளியோர்க்கு ஈதலும் மிக உயர்ந்த அறமாகக் கருதப்பட்டு வருகின்றன. தனிநபர்களின் சிறு உதவிகள் கூட ஒரு சமூகத்தின் பேரழிவையோ அல்லது வறுமையையோ மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டவை என்பதை இந்நாள் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. பன்னாட்டுத் தொண்டு […]

September 5, 2026 admin
உலக தேங்காய் தினம்:பூஜ்ஜியக் கழிவுப் பொருளாதாரத்தின் புதிய புரட்சி! Exclusive

உலக தேங்காய் தினம்:பூஜ்ஜியக் கழிவுப் பொருளாதாரத்தின் புதிய புரட்சி!

இன்று செப்டம்பர் 2 -உலக தேங்காய் தினம்.இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் ‘கற்பகவிருட்சம்’ எனச் சொல்லப் படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள்.உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய். இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்… கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். […]

September 2, 2026 admin
உடலினை உறுதி செய்:தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 – 7 Exclusive

உடலினை உறுதி செய்:தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 – 7

நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது அந்நாட்டின் உள்கட்டமைப்பில் மட்டும் இல்லை, அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்திலும் அடங்கியுள்ளது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் நோக்கம் உடலுக்குத் தேவையான […]

September 1, 2026 admin
பேனா முனையில் பூக்கும் அன்பின் தடம்:உலகக் கடிதம் எழுதும் தினம்! Exclusive

பேனா முனையில் பூக்கும் அன்பின் தடம்:உலகக் கடிதம் எழுதும் தினம்!

மனித நாகரிகத்தின் மிக அரிய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கடிதம் எழுதும் பழக்கமாகும். ஆண்டுதோறும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகக் கடிதம் எழுதும் தினம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. வேகமான டிஜிட்டல் உலகில், ஒரு கடிதத்தை தன் சொந்தக் கையால் எழுதுவதிலும், அதை தபாலில் அனுப்புவதிலும், பிறரிடமிருந்து வரும் கடிதத்தைப் பெற்றுப் படிப்பதிலும் உள்ள எளிய அழகையும் மனநிறைவையும் மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். செப்டம்பர் 1 — உணர்வுகளின் உன்னதப் பயணம் ஒரு […]

September 1, 2026 admin
மீள முடியாத வலை:சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தின் எச்சரிக்கை மணி! Exclusive

மீள முடியாத வலை:சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தின் எச்சரிக்கை மணி!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சர்வதேச அதிகப்படியான மருந்து பயன்பாட்டு விழிப்புணர்வு தினம் (International Overdose Awareness Day) உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருட்கள் அல்லது வீரியமிக்க மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் (Overdose) ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதும், இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும். 2026 ஆம் ஆண்டில் இத்தினம் தனது 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 25-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மையக்கருத்து 2026 ஆம் ஆண்டிற்கான […]

August 31, 2026 admin
உடனடி செய்திகள்