32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 115 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 115)
போலியோ தினம் எனப்படும் உலக இளம்பிள்ளை வாத நாள்! Running News

போலியோ தினம் எனப்படும் உலக இளம்பிள்ளை வாத நாள்!

இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம். இன்று போலியோ பெருமளவு கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டது. இதற்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் மருத்துவர் ஜோனஸ் சால்க். அவரது நினைவாக உலக இளம்பிள்ளை வாத தினம் இதே அக்டோபர் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த போலியோ வைரஸ் […]

October 24, 2020 admin
சங்கரலிங்கனார் : உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட தியாகி! மறக்க முடியுமா

சங்கரலிங்கனார் : உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட தியாகி!

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணா விரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி.  இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். அதாவது ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு உண்ணவிரதமிருந்து 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. காந்தியின் சீடர் […]

October 13, 2020 admin
பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தின டைரிக் குறிப்பு! மறக்க முடியுமா

பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தின டைரிக் குறிப்பு!

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை நம்பாத அடுத்தடுத்த தலைமுறையும் இங்கு வந்து விட்டது. இந்நிலையில் ஒரு அரசியல்வாதியின் இலக்கணமாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கடைசி நாள் சம்பவங்களின் தொகுப்பு – (By கட்டிங் கண்ணையா) 1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06,30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலைப் பத்திரிக்கைகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன.எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார். 10 மணிக்கு காமராஜரை தினந்தோறும […]

October 2, 2020 admin
மகான் குரு நானக்! மறக்க முடியுமா

மகான் குரு நானக்!

முன்னொருக் காலத்தில் இங்குள்ள மக்களிடம் எல்லை மீறி இருந்த தீண்டாமை, மூட நம்பிக்கை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனிதனாகப் பிறந்தவர்கள் சாதி, மதம் எனும் பெயரில் பிரிந்து விடாமல் மக்கள் எனும் ஒரே நிலையில் ஒன்றுபட்டு ஒற்றுமை யுடன் வாழ வேண்டும் என்று உபதேசித்ததுடன், மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர் களாகவும், அவர்களுக்குள் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து, ஆனந்தம், சாந்தி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் […]

September 22, 2020 admin
அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா! மறக்க முடியுமா

அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா!

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக் காப்பது அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர்.. இனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்.. தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை பிராந்திய மொழிகளும் அழிந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டும் என்று விரும்பியவர்..அதிகம் பேரால் பேசப்படும் இந்திதான் இந்த நாட்டின் தேசிய மொழி என்று டெல்லி அறிவிக்க முயன்ற போதெல்லாம் தடைக்கல்லாய் திகழ்ந்தவர்..!பெரும்பான்மைக்குத்தான் முதன்மை என்றால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள […]

September 15, 2020 admin
சரித்திரக் கதைகளில் சாதனைப் படைத்த சாண்டில்யன்! மறக்க முடியுமா

சரித்திரக் கதைகளில் சாதனைப் படைத்த சாண்டில்யன்!

‘சாண்டியல்யன்’ வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது. அவர் எழுதிய 48 வரலாற்று நாவல்களில் கடல் புறா,யவன ராணி, ஜலதீபம் (மூன்று பாகங்கள்), மன்னன் மகள், கன்னி மாடம் போன்ற புதினங்களை இன்றைக்கும் கூட தேடி பிடித்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்த சாண்டில்யன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் விற்பனையில் தேக்கம் வந்தால் சாண்டில்யன் தொடரை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்கள் என்று சொல்வார்கள். அப்படி பலரால் […]

September 11, 2020 admin
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் K.S. ராஜா! மறக்க முடியுமா

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் K.S. ராஜா!

இன்றைக்கு செவிட்டு மெசின் மாதிரி ஹெட் போனை மாட்டிக் கொண்டு பலர் கேட்கும் எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர் களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர் ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். “வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!” 1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி! […]

September 3, 2020 admin
தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி -கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்! மறக்க முடியுமா

தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி -கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்!

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் . நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் அவருக்கு வந்தது. ஆனந்த விகடனில் தான் எழுதிய ‘சதிலீலாவதி’ தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். […]

August 30, 2020 admin
கலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்! சினிமா செய்திகள்

கலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்!

அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே அப்படீன்னு 1959ஆம் வருசம் களத்தூர் கண்ணம்மா படத்தில் தக்கனூண்டு பாலகனாக அறிமுகமாகி பாடி அசத்தி முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கி இன்னிவரைக்கும் உலக நாயகனாக உயர்ந்து சினிமாதுறையில் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் திரைப்பயணம் தொடங்கி 61 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த சீனிவாசன், ராஜலட்சுமி அம்மையாருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள். அதில் கடைக்குட்டி சிங்கம் தான் […]

August 12, 2020 admin
தமிழ் ரசிகர்களை இன்றும் கவரும் ’தில்லானா மோகனாம்பாள்’ – ஞாபகக் குறிப்புகள்! Running News

தமிழ் ரசிகர்களை இன்றும் கவரும் ’தில்லானா மோகனாம்பாள்’ – ஞாபகக் குறிப்புகள்!

சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் […]

July 27, 2020 admin
உடனடி செய்திகள்