32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 117 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 117)
மெல்லிசை மன்னர்களின் குரு  S M. சுப்பையா நாயுடு! மறக்க முடியுமா

மெல்லிசை மன்னர்களின் குரு S M. சுப்பையா நாயுடு!

தமிழ்த் திரை இசையின் பிதா மகன் – S M சுப்பையா நாயுடு. – இவர் மெல்லிசை மன்னர்களின் குரு என்றே அழைக்கப்பட்டவரின் நினைவு நாளின்று! இவர்தான் முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர், டி எம் எஸ் பாடிய முதல் திரைப்பாடலுக்கு இசையமைத்தவர், எம் ஜி ஆரின் முதல் கொள்கைப்பாடலுக்கு இசையமைத்தவர், கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர், எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த முதல் பாடலை திரையில் ஒலிக்க செய்தவர் – […]

May 26, 2020 admin
வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு! Running News2

வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு!

சினிமா கற்பனைக்கும் அப்பால் காவியங்களையும், சாதனைகளையும் படைத்த வண்ணம் இருக்கிறது. திரைகளில் மலர்ந்தாலும் காலங்கள் பல கடந்த நிலையிலும் சில பல ஆளுமைகளை இன்றைக்கும் நம் கண் முன் நிறுத்தும் படைப்புகள் பலவுண்டு. அப்படியான கலைப்படைப்பில் ஒன்றுதான் இந்த வீரபாண்டிய கட்ட பொம்மன்.. “வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! […]

May 16, 2020 admin
எழுத்துலகில் சித்தர் என்று பெயரெடுத்த நான் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதேன்?  – பாலகுமாரனே சொன்ன விளக்கம்! Running News

எழுத்துலகில் சித்தர் என்று பெயரெடுத்த நான் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதேன்? – பாலகுமாரனே சொன்ன விளக்கம்!

மேற்கணட கேள்விக்கு பாலகுமாரனே சொன்ன பதில் இதோ: ஏகப்பட்ட பத்திரிகைகளில் நன்றாக எழுதிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் சினிமாவுக் குள் போக வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டது. இன்றைய நிலையில் பாரதியாக இருந்தாலும் குறைந்தபட்சம் கவிதை எழுதவாவது சினிமாவுக்குள் பிரவேசித்திருப்பார். எனக்கு ஆசை வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இயக்குனராக ஆசை இருந்தது. சினிமாத்துறை என்பது நிர்வாகம் சேர்ந்தது. எழுத்தாளன் வெகுளித்தனமானவன். ஆனால் சினிமாவுக்கு நிர்வாகத் திறனும் தேவை என்பதால் என்னால் அதன் வேகத்துக்கு, அதன் தன்மைக்கு ஈடு […]

May 15, 2020 admin
அன்னக்கிளி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ண அப்போ ஆளில்லை! Running News

அன்னக்கிளி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ண அப்போ ஆளில்லை!

மிகச்சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976ல் மே 14ல் சிவகுமார், சுஜாதா நடித்த அன்னக்கிளி திரைப்படம் ரிலீஸ் ஆனது. தேவராஜ் -மோகன் என்ற இரட்டை இயக்குனர்கள் இப்படத்தை இயக்கி இருந்தார்கள். இப்படத்தின் மூலம்தான் இளையராஜா என்ற மாபெரும் இசைக்கலைஞர் திரை உலகத்துக்கு கிடைத்தார். காலம் சென்ற பஞ்சு அருணாசலம் இப் படத்தை தயாரித்து இருந்தார்.படத்தின் கதையை இப்பட இயக்குனர்கள் திறம்பட இயக்கி இருந்ததால் சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான தேசிய விருதை இப்படம் பெற்றது. முதல் பாடலான […]

May 14, 2020 admin
இந்திய சினிமாவின் முகம் சத்யஜித் ரே! Running News

இந்திய சினிமாவின் முகம் சத்யஜித் ரே!

வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலரது வாழ்க்கை பாடமாக அமையும்.. அப்படி சினிமாவில் அக்சீவ் செய்ய முடிவு செய்த ஒவ்வொருவருக்கும் பாடமாக விளங்குவது சத்யஜித் ரே வாழ்க்கை. ஆம்.. நம் நாட்டின் திரையுலக மேதையக்கும் அப்படீன்னு புகழப்படும் சத்யஜித் ரே ஓர் ஓவியர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என ஏகப்பட்ட முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். சர்வதேச அளவில் சிறந்த இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி, உலகளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கு […]

May 2, 2020 admin
அனைத்துலக நடன தினம்! மறக்க முடியுமா

அனைத்துலக நடன தினம்!

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுத்துவதுமே இந்த சர்வதேச நடன தினத்தின் முக்கிய இலக்காகும். 1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது.இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் […]

April 29, 2020 admin
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ! Running News

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் !

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயர் ஹாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டில் கூட தெரியாதவர் இருக்க முடியாது. ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டில் ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண். ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது. பிரிட்டனில் சில மௌனப்படங் களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். ரசிகர்களை திகிலடைய வைக்கும், முதுகுத் தண்டைச் சில்லிட […]

April 29, 2020 admin
அப்பச்சன்! Running News

அப்பச்சன்!

மலையாளப் படவுலகின் பாரம்பரியமுள்ள தயாரிப்பாளர்- இயக்குநர். கொச்சி நகரில் காக்கநாடு என்னுமிடத்தில் ஸ்டுடியோ ஒன்றினை நிர்மாணித்து, அங்கே 3-டி-யில் இந்தியாவின் முதல் முயற்சிக்கு முகம் கொடுத்தவரிந்த அப்பச்சன். முன்னதாக மலையாளப் படவுலகில் முதல் சினிமாஸ்கோப் படத்தை எடுத்து, தொடர்ந்து ஏனைய தயாரிப்பாளர்கள் சினிமாஸ்கோப் படமெடுக்கத் தைரியம் கொடுத்தவர் அப்பச்சன். தனது ‘படயோட்டம்’ படத்தில் 70 எம்.எம். ஆறு டிராக் ஸ்டீரியோஃபோனிக் விசேஷ ஒலி அமைப்பை இந்தியா வில் முதல்முறையாக இணைத்து, சினிமா சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் ஆச்சரியக்குறியாக மாறியவர். […]

April 23, 2020 admin
உலகக் குரல் நாள் இன்று ! Running News

உலகக் குரல் நாள் இன்று !

வேர்ல்ட் வாய்ஸ் டே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும்.பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, `அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் […]

April 16, 2020 admin
இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923 Exclusive

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

“உங்களுக்கு சுகர் இல்லையா?” என்று சாதாரணமாக விசாரித்து முகத்தைச் சுளித்து கொள்ளும் அளவுக்கு இன்று சர்க்கரை நோய் பரவாலகிவிட்டது. அதன் சிகிச்சைகளும் எளிதாகிவிட்டன. காரணம், நீரிழிவுக்கான ஆணிவேரையும் தீர்வையும் நாம் கண்டுபிடித்துவிட்டோம். நாம் உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப் படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடிச்சார். அதுவும் எப்படி-ங்கறீங்க? […]

April 15, 2020 admin
உடனடி செய்திகள்