32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 114 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 114)
பாரத் கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) சரோஜினி நாயுடு! மறக்க முடியுமா

பாரத் கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) சரோஜினி நாயுடு!

கவிக்குயில் சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆந்திராவில் ஐதராபாத்தில் அகோரநாத் என்பவருக்கு 1879-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி மகளாகப் பிறந்தார். மிகத் திறமையாகப் படித்து தமது 12-வது வயதிலேயே மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றார். பின்னர் வீட்டிலேயே தந்தையிடம் பயின்றார். இவர் தமது 12-வது வயதிலேயே ‘மெஹர் முனீர்’ என்ற கவிதையை எழுதினார். தந்தையின் நண்பர்களில் ஒருவரான மருத்துவர் கோவிந்தராஜு நாயுடுவை இவருக்குப் பிடித்திருந்தது. […]

March 2, 2021 admin
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாளின்று! மறக்க முடியுமா

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாளின்று!

2002 ஆம் வருஷம் குஜராத் ஸ்டேட்டை நரேந்திரமோடி ஆட்சி செய்து கொண்டிருந்தார். அக்காலக் கட்டத்தில் குஜராத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயில் யாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷித் என்கிற இந்து இயக்கத்தினர் சென்று விட்டு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் 1700 பேர் அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தாங்க. இதே பிப்ரவரி 27ந்தேதி இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தொடர்வண்டி வந்து நின்றது. அப்போ அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி […]

February 27, 2021 admin
சிவ ஜெயந்தி @ சிவாஜி ஜெயந்தி! மறக்க முடியுமா

சிவ ஜெயந்தி @ சிவாஜி ஜெயந்தி!

மராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுது. இன்றைய தினம் சிவ ஜெயந்தி என்றும் சிவாஜி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுது. 1630 பிப்ரவரி 19 ல் முகலாயர் ஆட்சி காலத்தில் புணே மாவட்டம் ஷிவ்ரேனி மலைக்கோட்டை யில் ஷாஹாஜி போன்ஸ்லே, ஜீஜாபாயி தம்பதிகளுக்கு சிவாஜி பிறந்தார். 1674 ஜூன்6ல் அரியணை ஏறினார். தாயிடம் மிக அன்பாக இருந்த சிவாஜி பக்தியோடு ராமாயண மகாபாரதங்களை படித்தறிந்தார். 1680 ஏப்ரல் 3 அன்று 52வது […]

February 19, 2021 admin
தட்டச்சு எனப்படும் டைப்பிங் தினமின்று! மறக்க முடியுமா

தட்டச்சு எனப்படும் டைப்பிங் தினமின்று!

இது முதன்முதலில் 2011 இல் கொண்டாடப்பட்டது. முன்னர் எழுதப்பட்ட தகவல்தொடர்பு மூலம் மக்கள் தங்களை வெளிப்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. கணினிகள் பெருகுவதற்கு முன்பு தட்டச்சு எந்திரங்கள்தான், தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டன. தட்டச்சு எந்திரங்களில் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும். இதுவே அரசு ஆவணங்கள் முதல் தனிநபர் தகவல் பரிமாற்றத் திற்கும் பயன்பட்டது. இப்போது தட்டச்சு கருவிகள் […]

January 8, 2021 admin
உலக மண் வள தினம்(World Soil health Day) மறக்க முடியுமா

உலக மண் வள தினம்(World Soil health Day)

நாம் நினைப்பதைப் போல மண் உயிரில்லாத ஒரு பொருள் அல்ல. அதற்கும் உயிர் இருக்கிறது. ஒரு கைப்பிடி மண்ணில், இந்த பூமியில் உள்ள மக்கள் தொகையை விட அதிக நுண்ணுயிர்கள் உள்ளன. இவற்றின் ஆற்றலால், இந்த மண்ணானது உயிர்ப்புடன் இருப்பதுடன், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட விதைகள் போன்ற மற்ற உயிர்களையும் உயிர்வாழச் செய்து, வளர்த்து இந்த உலகத்தைப் பசுமையாக வைத்திருக்கிறது. உயிர் என்று ஒன்று இருந்தால், உயிர் இழப்பும் இருக்கும்தானே. ஆம்.. நம்மை வாழவைக்கும் மண்ணுக்கும் இறப்பு உண்டு. […]

December 5, 2020 admin
விஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே! மறக்க முடியுமா

விஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே!

விஜயகாந்த் ஹீரோவா நடிச்ச அகல் விளக்கு படம் இதே டிசம்பர் 4ல்-தான் ரிலீஸாச்சு அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ: விஜயகாந்த் நடிச்ச இரண்டாம் படத்தில்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’ (1979 டிசம்பர் 4). (‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர்) அந்த அகல விளக்கு […]

December 4, 2020 admin
இந்தியாவின் முதல் அட்வகேட் ஜெனரல்- வி.பாஷ்யம் அய்யங்கார்! Exclusive

இந்தியாவின் முதல் அட்வகேட் ஜெனரல்- வி.பாஷ்யம் அய்யங்கார்!

‘உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைப்பதா? அதை தரிசனம் செய்துவிட்டுத்தான் நாங்கள் நீதிமன்றத்திற்குள் வரவேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது’ என்று ஒரேயடியாக நீதிபதிகள் அடம் பிடித்தார்கள். வழக்கறிஞர்கள் சிலர் விடவே இல்லை. தொடர்ந்து போராடி, அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக சிலை வைத்தார்கள். புகழ் பெற்ற சிற்பி எம்.எஸ்.நாகப்பா தத்ரூபமாக வடித்த அந்த சிலை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த பிறகு, நீதிபதிகள் வேறு விதமாக வெறுப்பைக் காட்டினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்குப் பக்க […]

November 18, 2020 admin
எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றி அப்போலோ டூ அமெரிக்கா சென்ற நாளின்று! மறக்க முடியுமா

எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றி அப்போலோ டூ அமெரிக்கா சென்ற நாளின்று!

எம்.ஜி.ஆர் உடல் நல்ம குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5 வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஷ்யம் தெரிந்து கூடி விட்ட […]

November 5, 2020 admin
எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று! மறக்க முடியுமா

எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று!

நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: அது குறித்து நம் கட்டிங் கண்ணையா பகிரும் சேதியிதோ: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதாகவும், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் செசன்ஸ் ஜட்ஜ் லட்சுமணன் இதே நவம்பர் 4ம் தேதிதான் தீர்ப்பு கூறினார். […]

November 4, 2020 admin
தேவர் ஜெயந்தி – சில நினைவுகள்! மறக்க முடியுமா

தேவர் ஜெயந்தி – சில நினைவுகள்!

இந்திய அரசியலையே பசும்பொன்னை சுற்றி வர செய்தவர் முத்துராமலிங்க தேவர்.ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவரையேச் சாரும். 1920-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் […]

October 30, 2020 admin
உடனடி செய்திகள்