கல்வி
கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் […]