சென்னை ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

சென்னை ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 272 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம்: நியாய விலைக் கடை

பணி : விற்பனையாளர்

காலியிடங்கள்: 80

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300 – 12,000

பணி: கட்டுநர்

காலியிடங்கள்: 192

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900 – 11,000

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்குள்பட்டவாரகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை-600018 என்ற முகவரியில் 31.07.2020 வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர்கள் பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை – 600018 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2020 அன்று மாலை 5.45க்குள் சென்று சேர வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வேலைவாய்ப்பு என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!