12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு!

12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சிய தேர்வுகள் ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து அப்போது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக்கலவித்துறை வெளியிட்ட அரசாணையில், தேர்வெழுதும் மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாகவோ அல்லது அவரவர்களின் பள்ளிகளில் 13.07.2020 முதல் 17.07.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுசீட்டுகளை தங்களது நுழைவுசீட்டுகளை மேற்கண்ட தேதிகளில் தங்களின் தங்களின் தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் அரசு வெளியிட்டுள்ள கரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts