Exclusive
இன்று நீட் நுழைவுத்தேர்வு: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. […]