யூனியன் வங்கியில் 500 உதவி மேலாளர் பணியிட வாய்ப்பு!

யூனியன் வங்கியில் 500 உதவி மேலாளர் பணியிட வாய்ப்பு!

ந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.ஏப்ரல் 1, 2020 அன்று நடைமுறைக்கு வந்த கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு , இணைக்கப்பட்ட நிறுவனம் சுமார் 9300+ கிளைகளைக் கொண்ட கிளை வலையமைப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக மாறியது. இப்பேர்பட்ட வங்கி காலியாக உள்ள 500 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்பத் தகுதியான விண்ணப்பதாரர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

என்னென்ன வேலைகள், எவ்வளவு சம்பளம்?

யூனியன் வங்கியில் இரண்டு விதமான உதவி மேலாளர் பணியிடங்கள் உள்ளன:

1. உதவி மேலாளர் (கடன்): இந்த பிரிவில் மொத்தம் 250 காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் CA/ CMA(ICWA)/ CS முடித்திருக்க வேண்டும் அல்லது நிதித்துறையில் முழுநேர MBA/ MMS/ PGDM/ PGDBM பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

2. உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்): இந்த பிரிவிலும் 250 காலியிடங்கள் உள்ளன. இதற்கும் மாதம் ரூ. 48,480 – 85,920 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழுநேர B.E./ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ ஐடி/ எலக்ட்ரானிக்ஸ் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளில் 5 வருட ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு .,தளர்வு விபரம்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இருப்பினும், சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையிலும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் ?

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க சில கட்டணங்கள் உண்டு.

SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 177/- கட்டணமாக வசூலிக்கப்படும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 1180/- செலுத்த வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Group Discussion) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) என மூன்று கட்ட முறைகள் பின்பற்றப்படும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அல்லது  இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!