சைபர் செக்யூரிட்டி படிக்கப் போறீங்களா? ஒரு நிமிடம்.. இதை வாசிங்க!

போன வருஷம் ஏன் AI/ML, டேட்டா சைன்ஸ் எல்லாம் BE ல படிக்க வேண்டாம் என்று சொன்னேன். இந்த வருஷம் பார்த்தா ஊரே சைபர் செக்யூரிட்டி பக்கம் நிக்குறானுங்க புள்ளைங்களை சேர்க்க.அது ஏன் மோசமான விஷயம், சைபர் செக்யூரிட்டியை UG-ல தேர்ந்தெடுக்கிறது ஏன் ஒரு சிக்கலான விஷயம் என்று பார்ப்போமா??
தமிழ்நாட்டுல பொறியியல் படிப்பு (Bachelor of Engineering) படிக்கிறது ஒரு பெரிய ட்ரீம். அதுலயும் இப்போ சைபர் செக்யூரிட்டி (Cybersecurity) படிப்பு ட்ரெண்டி, ஹை-டெக்னு சொல்லி எல்லாரும் அதுக்கு முண்டியடிக்கிறாங்க. ஆனா, UG-ல சைபர் செக்யூரிட்டியை தேர்ந்தெடுக்கிறது ஒரு சிக்கல்னு நான் சொன்னா, நீங்க என்ன சொல்வீங்க? “அட, என்னடா இது?”னு சிரிப்பீங்களா இல்ல யோசிப்பீங்களா?இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு: ஒன்னு, UG-ல இதை படிக்கிறது காரணம் அவசரமாக ஆட்கள் இல்லாத துறை, கல்லூரிகள் ஃபேன்ஸி யாக போட்டு கொள்கிறார்கள், syllabus சரியாக வேற இல்லை; இன்னொன்னு, இதெல்லாம்PG-ல தான் படிக்கணும்.
இது ஒரு ஸ்பெஷலைஸ்டு ஃபீல்டு—ஹேக்கிங், நெட்வொர்க் செக்யூரிட்டி, என்க்ரிப்ஷன்னு நிறைய ஆழமான விஷயம் இருக்கு. ஆனா, UG-ல நம்ம காலேஜுங்க பாடத்திட்டம் பார்த்தீங்கனா, முதல் ரெண்டு வருஷம் பழைய கதையை தோண்டி எடுக்கிறாங்க. அதுக்கு அப்புறம் தான் சைபர் செக்யூரிட்டி பாடம் வருது—அதுவும் “Ethical Hacking”னு ஒரு செமஸ்டர் போட்டு, “இதுக்கு மேல PG-ல படி”னு சொல்லிடுறாங்க.
ஒரு காலேஜுல சைபர் செக்யூரிட்டி கிளாஸ் எடுத்த புரொபஸர், “ஹேக்கர்ஸ் எப்படி நெட்வொர்க்கை பிரேக் பண்ணுவாங்கனு புரியணும்னா, முதல்ல உங்க Wi-Fi பாஸ்வேர்டை பிரேக் பண்ணி பாருங்க”னு சொன்னாரு. அவரு சொன்ன அடுத்த நிமிஷம், கிளாஸ்ல பாதி பேரு ஃபோனை எடுத்து “Airtel123” ட்ரை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! இப்படி ஒரு புரொபஸரு UG-ல சைபர் செக்யூரிட்டி படிப்பிச்சா, நீங்க ஹேக்கராவறதுக்கு முன்னாடி உங்க பர்ஸ் ஹேக் ஆய்டும்—காலேஜு ஃபீஸ் கட்டி!அதுல ஒரு கோர்ஸ் பேரு சோஷியல் நெட்வொர்க் செக்யூரிட்டி, அதை எடுக்க தமிழ்நாட்டிலே ஒரு 30 professor தான் இருப்பாங்க. ஆனா எல்லா காலேஜ்லயும் காசு வேண்டும்ன்னு வரவன் போறவன் எல்லாரையும் professor ஆக்கி எடுக்க விடுறானுங்க.
தமிழ்நாட்டுல பல காலேஜுல சைபர் செக்யூரிட்டி படிக்க லேப் செட்டப் இல்லை. ஒரு லேப்ல “Ethical Hacking” ப்ராக்டிகல் பண்ணலாம்னு போனா, 10 வருஷமா ஓடுற Pentium 4 கம்ப்யூட்டரு தான் இருக்கு. “Sir, Kali Linux இன்ஸ்டால் பண்ணலாமா?”னு கேட்டா, “காளி யாரு? அவளுக்கு என்ன லினக்ஸ்?”னு புரொபஸர் கேட்டுட்டு, “நீங்க வீட்ல டவுன்லோடு பண்ணி பாருங்க”னு சொல்றாங்க. இது லேப் இல்ல, லேப்டாப் கூட இல்லாத லாபமில்லா சோகம்!
அதுவும் இல்லாம, புரொபஸருங்க பல பேருக்கு சைபர் செக்யூரிட்டி பத்தி அவ்வளவு தெரியாது. UG-ல இப்படி ஒரு அடிப்படை அறிவு மட்டும் கொடுத்து, “மீதியை PG-ல படி”னு விட்டுடுறாங்க.சைபர் செக்யூரிட்டி, AI/ML மாதிரியான ஸ்பெஷலைஸ்டு ஃபீல்ட்ஸ் எல்லாம் UG-ல படிக்கிறது ஒரு அவசரமான முடிவு. UG-ல நீங்க அடிப்படையை (Basics of Engineering) புரிஞ்சிக்கிட்டு, PG-ல இதை ஸ்பெஷலைஸ் பண்ணா தான் ஆழமா தெரியும். UG-ல இதை படிச்சா, பாதி புரியாம, பாதி லேப் இல்லாம, “சைபர் செக்யூரிட்டி படிச்சவன்”னு சொல்லிட்டு, உங்க ஃபோன் பாஸ்வேர்டை கூட ப்ரொடெக்ட் பண்ண முடியாத நிலைமை வரும்.
அதனால, UG-ல இப்படி ஸ்பெஷலைஸ்டு கோர்ஸை தேர்ந்தெடுக்கிறதுக்கு பதிலா, அடிப்படையை படிச்சு, PG-ல சைபர் செக்யூரிட்டியை ஆழமா படிங்க. இல்லேனா, “நான் சைபர் எக்ஸ்பர்ட்”னு சொல்லி சிரிக்கிறதுக்கு பதிலா, உங்களை பார்த்து எல்லாரும் சிரிப்பாங்க. யோசிப்போம், ஸ்மார்ட்டா பிளான் பண்ணுவோம்! ஜெனரல் CSE மட்டும் எடுத்து படிங்க!
சேஷாத்ரி தனசேகரன்