32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 190 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 190)
அமேசான் என்கிற ஆச்சர்யம்! எடிட்டர் ஏரியா

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!! இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை. இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! இதற்கு […]

July 1, 2016 admin
நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

சமூக ஊடகப் பயனாளிகள் பலரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் அவற்றைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என ட்விட்டர் குறும்பதிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. அது மட்டுமல்ல; சமூக ஊடகங்கள்தான் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரதான வழியாகவும் உள்ளன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியைவிட, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முக்கிய வழிகள். இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது ட்விட்டர் டைம்லைனைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். […]

June 26, 2016 admin
திருப்பதி லட்டு! – தெரியாத விஷயங்கள்! அலசல்

திருப்பதி லட்டு! – தெரியாத விஷயங்கள்!

திருப்பதி லட்டுகளுக்கு விசேஷ ருசியும் தனித்தன்மையும் உண்டு. மற்ற லட்டு தயாரிப்புகளுடன் இதை ஒப்பிடவே முடியாது. இதில் சேர்க்கப்படும்.பொருட் களின் கலவை திருப்பதி லட்டு சுவைக்கே உரியதாகும். நாள்தோறும் குறைந்தது ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன சமையலறை கூடத்தில் லட்டு தயாரிப்பில் 150 பேர் பணியாற்றுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டுகளைத் தயாரிக்க நாள்தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், […]

June 10, 2016 admin
இந்தியாவின் பிரதமருக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை- அடேங்கப்பா! எடிட்டர் ஏரியா

இந்தியாவின் பிரதமருக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை- அடேங்கப்பா!

நேற்று இந்திய வரலாற்றில் இன்னொரு முக்கியமான நாள். பிரதமரின் வாஷிங்ட்டனில் உள்ள கேப்பிடல் ஹில் என்னும் அமெரிக்க அரசை ஆட்டி வைக்கும் காங்கிரஸ் என்னும் லா மேக்கர்ஸ் முன்பு நடத்திய உரை. அமெரிக்காவில் ஒபாமா கூட பெரிய ஆள் இல்லை இந்த காங்கிரஸ் என்னும் லா மேக்கர்ஸ் தான். பல முறை ஒபமாவையே தண்ணி குடிக்க வைத்த இந்த காங்கிரஸ் நரேந்திர மோடிக்கு விசா குடுக்க கூடாது என பல முறை தீர்மானம் ஏற்றி அதை ஸ்டேட் […]

June 9, 2016 admin
நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்! எடிட்டர் ஏரியா

நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்!

இந்தியாவின் மத்திய ஆட்சியில் ராணுவமும், மாநில ஆட்சிகளின் கீழ் காவல் துறையும் உள்ளன. இந்தியா பூகோள ரீதியாக மேலும் வலுவாக வேண்டுமானால், கங்கை – காவிரி நதிகளின் இணைப்பால்தான் அது முடியும். நதிகளை இணைப்பதற்கான திட்டத்தைப் பற்றி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கே.எஸ். ராவ், சர் ஆர்தர் காட்டன், டி.ஜே. தஸ்தூர், விஸ்வேஸ்வரய்யா, சி.பி. ராமசாமி ஐயர் முதலிய மேதைகள் தொலைநோக்கோடு சிந்தித்திருக்கிறார்கள். 1960-இல் சட்லஜ் நதியின் குறுக்கே பக்ராநங்கல் அணை கட்டப்பட்டு, பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் […]

June 5, 2016 admin
அய்யே.. தமிழருவியாரே : ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுங்கறேன்!…. எடிட்டர் ஏரியா

அய்யே.. தமிழருவியாரே : ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுங்கறேன்!….

தமிழருவி மணியன் அவர்களுக்கு என்ன ஆனது?ஏன் இந்த புலம்பு புலம்புகிறார்? எந்த ஊடகத்தை பார்த்தாலும் அழுகாச்சி. என்ன ஆனது அவருக்கு. மக்களை திருத்த முடியாது என்கிறார். 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தேன். 48 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது 67 வயதாகிறது. இதற்குமேலும் முடியவில்லை. கால்கள் தளர்ந்துபோய்விட்டது. மனது சோர்ந்து போய்விட்டது என்கிறார். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை ஒப்புக்கொள்கிறார். சரி. அப்படி என்ன களப்பணி ஆற்றிவிட்டீர்கள். எழுதியிருக்கிறீர்கள். பேசியிருக்கிறீர்கள். மக்களோடு சேர்ந்த களப்பணி எங்கே […]

May 29, 2016 admin
நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரணும். பழைய பன்னீர்செல்வமாக வரணும். எடிட்டர் ஏரியா

நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரணும். பழைய பன்னீர்செல்வமாக வரணும்.

இந்தப் பதிவு தாமதமானதுதான். ஆனால் நிதானமாக எழுதப்பட்டது. ‘ஒரு ‘கலங்கரை விளக்கம், தனக்குத்தானே கருந்திரையை இழுத்துப்போட்டு மூடிக்கொண்டது’ என்றுதான் தொடங்க நினைத்தேன். பிறகு அந்த கலங்கரை விளக்கம் ஏன் கலங்கப்பட்டது என்பதையும் நினைத்துப் பார்க்கின்றேன். எந்த களப்போராட்டமும் இலக்கை எட்டாமல் வீழ்ந்து போகாது என்பதற்கு பல நாடுகளின் போராட்டங்களை சுட்டி நிமிரவைத்தவர். இப்போது அவரே சோர்வுற்று முடிவெடுத்துவிட்டார். அவரது முடிவு. அவருக்கு சரியானது. ஆனால் அதை வெளிப்பத்தியிருக்க வேண்டாம் என்பதே என் போன்றவர்களின் கருத்து. எதிரி, மலைமீது […]

May 27, 2016 admin
மைனர் குற்றவாளிங்களுக்கு நோ ஜெயில் ! – இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? எடிட்டர் ஏரியா

மைனர் குற்றவாளிங்களுக்கு நோ ஜெயில் ! – இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அண்மையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு 39,822லிருந்து 2014ம் ஆண்டில் இது 48,230 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின் படி இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 2012ல் 39 ஆயிரத்து 822 பேரும், 2013ல் இது அதிகரித்து 43 ஆயிரத்து 506 பேரும், 2014ல் 48 […]

May 26, 2016 admin
அம்மா  நாங்க ட்ராவல் செய்யும் போது  பப்ளிக் டாய்லெட் கட்டி நீட்டா யூஸ் பண்ண வழி பண்ணுங்கம்மா! எடிட்டர் ஏரியா

அம்மா நாங்க ட்ராவல் செய்யும் போது பப்ளிக் டாய்லெட் கட்டி நீட்டா யூஸ் பண்ண வழி பண்ணுங்கம்மா!

பொது மருத்துவரும், குழந்தைகள் மருத்துவரும் இணைந்து பார்க்கும் க்ளினிக் ஒன்றில் காலையில் காத்துக் கொண்டிருந்தேன். தொடர்மழை காரணமாக க்ளினிக்கில் நல்ல கூட்டம்… ஐம்பதுக்கும் மேல் குழந்தைகளும், பெற்றோர்களும் உட்கார்ந்திருந்தார் கள். அப்பாயின்மெண்ட் இல்லாமல் டோக்கன் முறையில் காத்து நின்று மருத்துவரை பார்க்க வேண்டும்.. ஒரு சிறுமி, ‘உச்சா வருகிறது’ என சிடுசிடுக்க ஆரம்பித்தாள். அந்த க்ளினிக்கில் டாய்லெட் இல்லை. கொஞ்சம் இடைவெளி விட்டு கிட்டத்தட்ட எல்லா சிறுவர்களும் உச்சா, சுச்சூ என ஆரம்பித்தார்கள். சிறுவர்களை மருத்துவமனையின் வெளிசுவரை […]

May 24, 2016 admin
பள்ளி, கல்லூரிகளில் கற்றல், கற்பித்தலில் மாற்றத்திற்கான மாற்றம் வந்தாச்சு அலசல்

பள்ளி, கல்லூரிகளில் கற்றல், கற்பித்தலில் மாற்றத்திற்கான மாற்றம் வந்தாச்சு

மதிப்பீடு என்பது கற்றல், கற்பித்தலின் இறுதியில் கற்பித்தல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் இடம் பெற வேண்டிய உடன் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. மொழி, இலக்கியம் என்பதையும் தாண்டி, இசை, நடனம், விளையாட்டு என எல்லாவகையான கற்றல், கற்பித்தல் எப்போது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே மதிப்பீடும் தோன்றி விட்டது. மதிப்பீடு என்பதை Value, Assessment, Judgement எனப் பல்வேறு கலைச் சொற்களுடன் இணைத்துப் பார்க்கும் நிலையில் அதன் பொருள் விரிந்து கிடக்கிறது. இன்றைய கல்வி முறையில் மதிப்பீடுகள் […]

May 22, 2016 admin
உடனடி செய்திகள்