32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 191 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 191)
படிச்ச தம்பதிகளே டைவோர்ஸ் கேட்கலாமா? டூ மச்! – சுப்ரீம் கோர்ட் கமெண்ட் எடிட்டர் ஏரியா

படிச்ச தம்பதிகளே டைவோர்ஸ் கேட்கலாமா? டூ மச்! – சுப்ரீம் கோர்ட் கமெண்ட்

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ’டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு குடும்ப நீதி மன்றங்களில் இது குறித்து  பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 35 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல… நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்…ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் […]

May 21, 2016 admin
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் என்னாச்சு? எடிட்டர் ஏரியா

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் என்னாச்சு?

இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா இந்தியா வந்துள்ளார். மைத்திரி சிறிசேனாவும் அவருடைய சுதந்திரா கட்சியும், புதிதாக இலங்கையில் அர்ப்பணிக்க உள்ள அரசியல் சாசன சட்டத்தில் சமஸ்டி முறைக்கு வழியில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். நான் தான் யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்திய பிரதமர் என்று மார்தட்டிக்கொள்ளும் மோடி, இப்பிரச்சினை குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. அவை யாவும் நடைமுறைக்கு வரவில்லை. அங்குள்ள தமிழ் […]

May 14, 2016 admin
நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்! அலசல்

நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டில் காகித ரூபாய் நோட்டை பொறுத்தவரை 18ம் நூற்றாண்டு வாக்கில்தான் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான், ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் மற்றும் பெங்கால் பேங்க் ஆகியவை இதனை வெளியிட்டன.இந்திய அரசு வெளியிட்ட முதல் நோட்டுகளில், விக்டோரியா மகாராணியின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தொடக்கத்தில் ரூபாயின் பாதுகாப்புக்காக, அவை இரண்டாக வெட்டப்பட்டு, முதலில் ஒரு பாதி தபாலில் அனுப்பப்பட்டது. அது வந்து சேர்ந்துவிட்டது என தகவல் பெறப்பட்டதும் இரண்டாவது பாதி அனுப்பப்பட்டது. 1867ல் இம்முறை […]

May 12, 2016 admin
மற்றுமொரு குமாரசாமி கணக்கு! எடிட்டர் ஏரியா

மற்றுமொரு குமாரசாமி கணக்கு!

தமிழக அரசின் கடன் சுமை பற்றி மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. இது அதிமுகவைச் சேர்ந்த ஆவடிகுமார் ஒரு செய்திக் கட்டுரைக்காக பேசும்போது சொன்ன தகவல்: ‘1996இல் அதிமுக ஆட்சி முடியும்போது தமிழ்நாடு கடனே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. அடுத்துவந்த, 1996 – 2001 திமுக அரசு, 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றது. இதிலிருந்துதான் அரசு கடன் சுமையில் விழத் தொடங்கியது’ என்றார். இது சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. 1996 மார்ச் […]

May 9, 2016 admin
அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல் எடிட்டர் ஏரியா

அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல்

திமுக, மநகூ, அதிமுக, பாஜக, பாமக தேர்தல் அறிக்கைகளில் சில பொதுவான விஷயங்கள் உள்ளன. அப்படியென்றால் இவை மக்களின் பொதுக்கருத்து, உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம் என்று எடுத்துக்கொள்ளலாம். (1) மதுவிலக்கு: அதிமுக தவிர அனைவரும் முதல் கையெழுத்திலேயே செய்துவிடலாம் என்கிறார்கள். அதிமுக “படிப்படியாக” என்கிறது. உண்மையில் “படிப்படியாக” என்பதுதான் சாத்தியமானது. எப்படியோ, யார் ஜெயித்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் மதுவின் ஓட்டம் குறைக்கப்படும், நீக்கப்படும். பார்ப்போம். (2) ஊழல் ஒழிப்பு/லோக் ஆயுக்தா: இது எனக்குப் பெரிய சர்ப்ரைஸ். இந்தியா […]

May 6, 2016 admin
தேர்தல் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் ஆபரேஷனாக்கும்! எடிட்டர் ஏரியா

தேர்தல் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் ஆபரேஷனாக்கும்!

1967 லிருந்து 1996 வரை நடந்த தேர்தல்களில் பார்வையாளன், வேட்பாளர்களின் முகவர், வேட்பாளர் என்று தேர்தல் களத்தில் இருந்துள்ளேன். 1998 நாடாளுமன்ற தேர்தல் வரை பூத் செலவு என்று வாங்குவதற்கே கிராமத்தில் தயங்குவார்கள். 1989ல் வெறும் 200 ரூபாய் கொடுத்தால் கூட எங்களுக்கு எதற்கு… தேர்தல் அன்று கிராமத்து சார்பில் நாங்களே செலவு செய்கிறோம். பணம் வேண்டாம் என்று மக்கள் மறுத்துவிடுவார்கள். அப்போது சின்ன பந்தல் அமைத்து பூத்திலிருந்து 200, 300 மீட்டர் தள்ளி தேர்தல் பணியை […]

May 2, 2016 admin
ஜெயேந்திரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.? எடிட்டர் ஏரியா

ஜெயேந்திரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.?

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்காகட்டும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்காகட்டும், சங்கரமட ஜெயேந்திரரை விடுதலை செய்திருக்கிறது. அரசு மேல்முறையீடு போவதும், போகாததும் வேறு விஷயம். ஆனால் சட்டத்தைப் பொருத்தவரை ஜெயேந்திரரை அநியாயமாக! சிக்க வைத்துவிட்டு விட்டார்கள். அவர் நிரபராதி.!! குற்றம் செய்தார் என்பதற்கான போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை!!! அதனால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இப்போது இரண்டு கேள்விகள் எழுகிறது. அரசு மேல்முறையீடு செய்து, அதிலும் ஜெயேந்திரர் விடுதலை என்று தீர்ப்பானால்…? நிரபராதியான ஜெயேந்திரரை, காவல்துறையும், அதற்கு பொறுப்பாபான அரசும் […]

April 30, 2016 admin
தேர்தல் கமிஷனுக்கு ஒரு பகிரங்க சவால்.  -ஆசிரியர்களின் குமுறல். எடிட்டர் ஏரியா

தேர்தல் கமிஷனுக்கு ஒரு பகிரங்க சவால். -ஆசிரியர்களின் குமுறல்.

இது தேர்தல் நேரம், தேர்தல் பணி பற்றி முன்பு பணிக்குச் சென்ற அனைவருக்கும் தெரியும். தேர்தல் பணி ஆணையை வாங்க மறுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்களின் மிரட்டல் தொணியிலான செய்தியை அறிந்திருப்பீர்கள். மருத்துவ விடுப்பு எடுத்தால் ரத்து செய்யப்படும், மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்.அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்தால் நாட்டில் ஆசிரியர்களுக்கென்றே தனியாக எமர்ஜென்சி அமல்படுத்தப் பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது. தேர்தல் பணி என்பது […]

April 30, 2016 admin
விஜயகாந்த் ரொம்ப நல்லவரு!! – ஏன் தெரியுமா? Running News

விஜயகாந்த் ரொம்ப நல்லவரு!! – ஏன் தெரியுமா?

விஜயகாந்த் மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் : – 1. சரியாக பேசுவதில்லை – செந்தமிழ்”லயே பேசி பேசி ஆட்சிய பிடிச்சு ரெண்டு கட்சிகளும் என்ன பண்ணிட்டாங்க நமக்கு ???? நாட்டை எப்படி வச்சுருக்காங்க ?????விஜயகாந்த் 1 1/2 வருடங்களுக்கு முன்னால வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு தானே இருந்தார். You Tube”ல போய் பாருங்க. சட்டசபைல எதிர் கட்சியா பேசினப்போ கூட நல்லா தான் பேசுவாரு… இப்போ உடல்நிலை காரணமா கொஞ்சம் முன்ன போல […]

April 28, 2016 admin
திருக்குறளை கட்டாயம் சொல்லிக் கொடுங்கப்பூ!-  ஐகோர்ட் ஆர்டர் Running News

திருக்குறளை கட்டாயம் சொல்லிக் கொடுங்கப்பூ!- ஐகோர்ட் ஆர்டர்

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எஸ்.ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘தற்போ தைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிபபாக இளைய சமுதா யத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை, பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு […]

April 26, 2016 admin
உடனடி செய்திகள்