32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 141)
ஊர்ப்பெயர்கள் புதிதாக எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை? Running News

ஊர்ப்பெயர்கள் புதிதாக எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை?

ஊர்ப்பெயர்களைத் தமிழ் வழக்காற்றின்படி ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் என்று பல நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டரசின் ஆணை அதனை நிறைவேற்றப் போகிறது. “ஊர்ப்பெயர்தானே… எப்படி இருந்தால் என்ன ?” என்பவர்களும் இருப்பார்கள். அவர்கட்குச் சிலவற்றை விளங்க வைத்தால்தான் உறக்கத்திலிருந்து விழிப்பர். ஊர்ப்பெயர்கள் இவ்வாறு எழுதப்படுவதன் பயன்கள் விளைவுகள் யாவை ? விரிவாகப் பார்க்கலாம். * 1. ஓர் ஊர்ப்பெயரானது அந்நிலத்தின் அடையாளம். புளியம்பட்டி என்று ஓர் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றால் அங்கே புளியமரங்கள் மிக்கிருந்தன என்று பொருள். […]

June 12, 2020 admin
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்! எடிட்டர் ஏரியா

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!

சமீபகாலமாக, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் பெண்களை இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த சக பங்கேற்பாளர்கள் சிலர் பாலியல் ரீதியாகவும், தகாத முறையிலும் பேசி வருகிறார்கள். பொதுவெளியில் பெண்களுக்கு ஏற்கெனவே இருக்கும் இன்னல்கள் போதாதென்று சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் பெண்களுக்கு எதிராக, பொது ஊடகங் களிலேயே இத்தகைய போக்கு தொடர்வது வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமல்ல, சட்டப்படி குற்றமாகும். “வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பேசிய சங்கராச்சாரியார், ஊடகத் துறையில் மேலதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொண்டே பெண்கள் பதவி […]

June 5, 2020 admin
புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு! எடிட்டர் ஏரியா

புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு!

மழையும் வெள்ளமும் மும்பைக்கு புதுசு இல்ல. ஒவ்வொரு வருசமும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை ரோட்ல நீந்தி பழகினவங்க அந்தூர் காரங்க. மீடியால ஃபுல் கவரேஜ். அரசாங்கத்தையும் கட்சிகளையும் கண்டபடி திட்டி எழுதுவாங்க பேசுவாங்க. ஆனா ஜனங்க கண்டுக்கவே மாட்டாங்க. பாத்தவங்களுக்கு தெரியும் அவங்களோட இண்டிஃபரன்ஸ் என்ன லெவல்னு. “யார திட்டி என்ன பிரயோசனம், சொல்லு. எந்த கட்சி வந்தாலும் இது மாற போறது இல்ல. அப்றம் எதுக்கு விமர்சனம் எல்லாம்..?” பறந்து வந்து தரைல விழுந்து […]

June 3, 2020 admin
லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்! Running News

லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!

பிரதமர் மோடி அறிவித்த லாக் டவுன் அமோக வெற்றி என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கொரோனாவை வெல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து ஊரடங்கை அறிவித்தார் மோடி. நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் முடங்கினால், கொரோனா பரவுவது நின்றுவிடும் என்று அவர் நம்பினார்.கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது பெரும்பாலான இடங்களில். கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறது. மரணம் அதிகமாகி இருக்கிறது. லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவை இல்லை. […]

June 2, 2020 admin
விடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.! Running News

விடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.!

இன்று கடலூர் சிறைச்சாலையில் இரண்டு தண்டனைக் கைதிகளுக்கு நோய்த் தொற்று, திருச்சியில் ஒரு கைதிக்கு என்ற செய்தி கசிந்துள்ளது. ஆனால், மதுரையில் இரண்டு கைதிகள், பாளையங்கோட்டையில் இரண்டு கைதிகள், சேலம் சிறையில் ஒரு கைதி, கோவை சிறையில் மூன்று கைதிகளுக்கு என கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ள விவரம் மறைக்கப் பட்டுள்ளது என்கிறார்கள். தவிர வேலூர் மற்றும் புழல் சிறைச்சாலை நிலவரங்கள் ஏதும் வெளியே தெரியவில்லை. அதுவும் மறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடசென்னை பக்கம் இந்த நோய்த்தொற்று அதிகம். […]

May 29, 2020 admin
சீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்! Running News

சீமான் பொய் பேசுகிறார்., சீமான் கதை விடுகிறார். சரிப்பா,- சுரேஷ் காமாட்சி காட்டம்!

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது அவ்வளவு சாதாரணமல்ல. மிகப்பெரும் ரணத்தைக் கடந்துதான் வரவேண்டும். தமிழ்தேசியம் பேசினால், எல்லாக்கூட்டமும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்கும். அதைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பது சாதாரணமல்ல.  இவர்களுக்கு அண்ணன் சீமான் பேசும் அரசியலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களின் அரசியல் கோட்டை சிதைந்து விடுமோ என்ற பயம். மக்கள் தங்களுக்கான உண்மையான அரசியல் எது எனக் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயம். அதனால் அவன் பேசும் அரசியலை பகிடியாக்கத் துடிக்கின்றனர். அரசியல் விவாதங்களுக்கு […]

May 28, 2020 admin
கோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா? Running News

கோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா?

தமிழகம் முழுவதும் இன்று நெம்பர் ஒன் கொள்ளை, பள்ளிக்கூட வியாபாரம்தான்.. பொட்டல் காட்டில் உள்ள ஊருக்குக்கூட ஒரு வேன் வந்து ஷூ, டையோடு யூனிபார்ம் போட்ட குழந்தைகளை வாரிக்கொண்டு போகிறது. காரணம், நர்சரி பள்ளிகளில் சேர்த்துவிட்டாலே தங்கள் பிள்ளைகளுக்கு இங்கிலீசு தானாக பொத்துக்கொண்டு ஊற்றும் என்பது பெற்றோரின் நம்பிக்கை… நகரங்களிலும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளை நாடுவது இந்த இங்கிலீசு மோகத்தால்தான். உண்மையை சொல்லுங்கள்.. பல ஆயிரம் செலவு செய்து படிக்கவைக்கப்படும் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு […]

May 23, 2020 admin
விகடன் குரூப் செய்யும் ஆள் குறைப்பு நியாயம்தானா? Running News

விகடன் குரூப் செய்யும் ஆள் குறைப்பு நியாயம்தானா?

1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளி களும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். […]

May 21, 2020 admin
கொரோனாவின் தாக்கத்தால் பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது! Running News

கொரோனாவின் தாக்கத்தால் பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது!

இதைப் படிப்பதற்கு முன் சொல்ல வேண்டிய வசனம் இதோ: காஞ்சி போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலடையும்.. அந்த நதியே காஞ்சிப் போயிட்டா..? மனுசங்க ளுக்கு குறை வந்த தெய்வத்துகிட்டே முறையிடுவாங்க.. அந்த தெய்வமே கலங்கி நின்னா..? – ஆம்.. நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா வின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது. உள்ளூர் பிரச்சினைகள் தொடங்கி […]

May 20, 2020 admin
நாம் திருடர்களாக மனநோயாளிகளாக மாறாமல் இருப்பதுதான் பெரிய சவால்! எடிட்டர் ஏரியா

நாம் திருடர்களாக மனநோயாளிகளாக மாறாமல் இருப்பதுதான் பெரிய சவால்!

கடந்த சில நாள்களாக இரண்டுவகையான மனிதர்களை நான் சாலைகளில் கவனித்தேன். முதல்வகை மனிதர்கள் குடிகாரர்கள். எங்கு பார்த்தாலும் சாலைகளில் உருண்டு கொண்டிருக்கிறார்கள். சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சக குடிகாரர் யாரிடமாவது யாசகமாக மது கேட்டு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது உருட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்ன பையன்கள் கூட மைதானங்களில் மறைவிடங்களில் குடிக்கிறார்கள். நேற்று ஆர்எஸ் புரம் சாலையில் ஒரு வயதான குடிகாரர் சாலையில் கிடந்தார்… அவருடைய மனைவி அவரை கையை பிடித்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்தார். அரைமயக்கத்தில் கைகளில் காலி பாட்டிலை […]

May 19, 2020 admin
உடனடி செய்திகள்