கோலிவுட்டின் புதிய அடையாளம் பாப்டா திரைப்பட கல்லூரி -புதிய விலாசம்

கோலிவுட்டின் புதிய அடையாளம் பாப்டா திரைப்பட கல்லூரி -புதிய விலாசம்
சென்னையின் பிரபல திரைக்கல்லூரியான BOFTA Premiere Film Institute கோடம்பாக்கத்தில் இருந்து வளசர வாக்கத்தில்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. BOFTA Premiere Film Institute தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் திரைத்துறை கல்வியை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதை, திரைக்கதை எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆகிய பிரிவுகளில் கல்வியை வழங்கி வருகிறது. மேலும் நடிப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் திரைக்கதை எழுத்து பயிற்சியை அஞ்சலக கல்வியாகவும் வழங்கி வருகிறது.  இந்நிறுவனம் தொடர்ச்சியாக சினிமா ஆளுமைகளை கொண்டு திரைப்பட பயிற்சி பட்டறையையும் திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து  பிரிவுகளிலும் நடத்தி வருகிறது.

இந்த பயிற்சி பட்டறை திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பு பெற,  உலகெங்கிலும் இருந்து பலரும் இப்பட்டறையில் கலந்துகொள்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியிலிருந்து திரைப்படிப்பிற்காக சான்றிதழ் பெற்று தரும் ஒரே நிறுவனமாக BOFTA Premiere Film Institute விளங்கி வருகிறது. கடந்த 4 வருடங்களில் BOFTA வில் படிப்பை முடித்தவர்கள் தமிழ் திரைத்துறையில் இயக்கத்தில், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்கள் தங்களது தனி அடையாளத்துடன் BOFTA வின் வேர்களாக மிளிரவுள்ளார்கள். BOFTA கோடம்பாக்கத்தில் இரண்டடுக்கு மாடி கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக இயங்கி வந்தது. தற்போது  உலகத்தரமான வசதிகளுடன், மிகப்பெரும் திரை நூலகத்துடன், வளசரவாக்கத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் மெகாமார்ட் காம்ளக்ஸ்க்கு அருகில், இந்திரா நகர் சாலையில் விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.

தற்போது BOFTA கல்லூரி புதிய இடத்தில் நடந்து வருகிறது

BOFTA Premiere Film Institute புதிய முகவரி.

BOFTA

262-A, Indira Gandhi Salai,

Off: Kamarajar Road,

Second right after Mega Mart,

Ramakrishna Nagar,

Virugambakkam,

Chennai – 600 087.

Contact: 044-4269-6320 / +91-90030-78000/90030-79000/

www.bofta.in / e-Mail: [email protected] or [email protected]