பெங்களூர் விமான நிலையத்தில் புது வசதி வரப் போகுதுங்கோ? என்ன அது??

அமெரிக்காவுல ஏர்போர்ட் பயணத்தின் போது – அந்த ஏர்போர்ட்டை பாதுகாப்பது டி எஸ் ஏ என்னும் அரசாங்க நிறுவனம் – இந்த நிறுவனத்தில் நான்கில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்க மிலிட்டரியில் வேலை செய்தவர்கள் அல்லது அரசாங்க உளவு துறை போன்ற பல துறைகளில் இருப்பவர்கள் – இவர்களின் பணி முதலில் போர்டிங் பாஸை ஒரிஜினல் ஐடி மூலம் செக் செய்வது.
இதன் பின்பு தலை முதல் கால் வரை ஸ்கின் செய்யும் 3 D ஸ்லைசிங் முறையில் பாடி ஸ்கேன் செய்து உடம்பில் உள்ள ஒரு குண்டூசியை கூட மறைச்சு கொண்டு செல்ல முடியாத வகையில் முழு எக்ஸ்ரே ஸ்கேன் செய்து பின்பு தான் கையில் கொண்டு செல்லும் உடமைகளை ஸ்கேன் செய்து ஒரு 20 நிமிஷம் முதல் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும் – இதனால் பலர் விமானத்தை தவற விடுவார்கள் நியூ யார்க் ஜெ எப் கே ஏர்போர்ட்டில் சமயத்தில் 2 மணி நேரம் கூட ஆகும் .
இந்நிலையில் டி எஸ் பிரி என்னும் புது வசதியை கொண்டு வந்திருக்கின்றனர் இதன் மூலம் உங்கள் பின்புலனை ஆராய்ந்து போலீஸ் / எப் பி ஐ போன்ற நிறுவனங்களின் ரிப்போர்ட் பாடி உங்களுக்கு இந்த டி எஸ் ஏ பிரி கிளியரன்ஸ் கொடுத்தால் – நீங்கள் 10 நிமிசத்தில வேகமா – பெல்ட் கழட்டாம – ஷூ கழட்டாம – ஜாக்கெட் கழட்டாம – லேப்டாப் வெளியே எடுக்காம – Full ஸ்கேன் செய்யாம வெகு ஈஸியா கடந்து விடலாம் – இதை இந்தியாவிலும் இந்த வகை சர்விசை அறிமுகப்படுத்த போறாங்க ..
ஆம்..இப்போதைக்கு பெங்களூர் விமான நிலையத்தில் விஸ்தார விமான பயணம் செய்வோருக்கு இந்த வசதி செய்யப்படுகிறது. இதன் மூலம் டைரக்ட்டா ஏர்போர்ட்டுக்குள் (Digi யாத்திரை) ஐடி இல்லாமல் ஜஸ்ட் ஸ்கேன் செஞ்சி போலீஸ்ல ஐடி போர்டிங் பாஸ் இல்லாம பயணம் செய்ய இயலும். கூடிய விரைவில் ஆதார் போர்டிங் வர போகிறது இதன் மூலம் கை நட்டு வச்சா போது போர்டிங் பாஸ் கூட தேவையில்லைங்கோ!