ஹார்ட்டின்: காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை!–விமர்சனம்!
நவீன தொழில்நுட்ப யுகத்தில், மனிதர்களுக்கு இடையேயான உறவுமுறைகளை விளக்க ‘சிட்சுவேஷன்சிப்’ (Situationship), ‘வெக்கேஷன்ஷிப்’ (Vacationship) எனப் புதுப்புது ஆங்கிலக் கலைச்சொற்களும் தற்காலிகப் போக்குகளும் தினந்தோறும் உருவாகி வருகின்றன. காதலைக் கடந்து செல்லும் தற்காலிக ஈர்ப்புகளையும், வரையறையற்ற குழப்பமான உறவுகளையும் தற்போதைய தலைமுறையினர் தங்களுக்குத் தகுந்தாற்போல் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், ‘காதல்’ என்ற உன்னதமான அடிப்படை உணர்வும் அதன் ஆழமும் ஒருபோதும் மாறுவதில்லை.
மனிதர்களின் ரசனைகளும், வாழ்க்கை முறைகளும், உறவுகளை அணுகும் விதங்களும் தலைமுறைக்குத் தலைமுறை மாறினாலும், ஒரு இதயத்தை மற்றொரு இதயம் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் அந்தப் பேரன்பின் எமோஷன், எந்தக் காலத்திலும் புதுமை மாறாமல் எப்போதும் வசந்தமாகவே இருக்கும். அந்த வசந்த காலத்து உணர்வை, ஒரு ‘Light, Lovely & Super Breezy Romcom’ பாணியில், நல்ல ‘vibe’ உடன் கூடிய ஒரு fresh feel-good என்டர்டெய்னராகக் கடத்துவதில் ஜெயித்துள்ளது இந்த ‘ஹார்ட்டின்’ (Heartin) திரைப்படம்.
கதைக்களம்: முக்கோணக் காதலும்.. நினைவிழந்த திருப்பமும்..
ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாகப் பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்குக் காதல் மலர்கிறது. ஆனால், தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட ஆழமான வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்று கூறி, சனத் அவரது காதலை ஏற்க மறுக்கிறார். சனத்தின் கடந்த காலத்தைப் புரிந்து கொண்ட பிறகும், அவர் மீது மாறாத காதலோடு இருக்கும் இமயாவின் பேரன்பு சனத்தை உருக வைக்கிறது. இறுதியில் இமயாவை சனத்தும் காதலிக்கத் தொடங்குகிறான்.
இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் சனத்தின் வாழ்வில் விதி விளையாடுகிறது. ஒரு விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு, தனது கடந்த 6 வருட நினைவுகளை அடியோடு இழக்கிறான் சனத். இதனால், இமயா மற்றும் அவளது காதலை முற்றிலும் மறந்துவிடுகிறான். அதே சமயம், தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவுச் சம்பவத்தையும் மறந்துவிடுவதால், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மடோனா செபாஸ்டியனைத் தேடிச் செல்கிறான். மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவனுடன் பயணிக்கும் இமயாவின் காதல் வென்றதா? அல்லது முதல் காதல் முறிவு தெரியாமல் பழைய காதலியைத் தேடி அலையும் சனத்தின் காதல் வென்றதா? என்பதே ‘ஹார்ட்டின்’ படத்தின் சுவாரசியமான கதை.
நடிப்புத் தரம்: படத்தைத் தாங்கும் பிரெஷ்ஷான பாத்திரங்கள்
நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் தேவையற்ற டூயட், ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, கதையின் தன்மையை உணர்ந்து ஒரு கச்சிதமான கேரக்டராக வலம் வந்துள்ளார். முதல் காதலியின் பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், பின்னர் இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவதும், இறுதியில் நினைவுகளை இழந்து தவிப்பது என ‘Easy charm + natural acting’ மூலம் ஹீரோவாக முழுமையாக செட்டில் ஆகியிருக்கிறார்.
அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி மிகத் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் நடித்து ‘Bright’ ஆகத் தெரிகிறார். அவரது திரை இருப்பும், நேர்த்தியான நடிப்பும் இமயா கதாபாத்திரத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ‘Definitely one to watch’ எனச் சொல்லும் அளவுக்குப் பாராட்டுப் பெறுகிறார்.
மடோனா செபாஸ்டியன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை ‘Decent’ ஆகச் செய்துள்ளார். காதலருக்கு இணையாகத் தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னைத் தேடி வரும்போது ஏற்படும் தடுமாற்றத்தையும் எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் ‘Secret Weapon’ என்று சொன்னால் அது சனத்தின் நண்பராக வரும் வாட்ஸ்-அப் மணிதான்! குணச்சித்திர வேடத்தோடு சேர்ந்து, படம் முழுவதும் தியேட்டரில் எவ்வளவு வேணாலும் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா தன் பங்கைச் சரியாகச் செய்துள்ளார்.
தொழில்நுட்பக் கூட்டணி: ஜெய்ப்பூர் டூ ஊட்டி.. ஒரு மியூசிகல் ட்ரீட்!
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அதன் அசல் அழகியலோடு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தி, கண்களுக்குக் காட்சி விருந்து படைத்திருக்கிறார். லொகேஷன்களே படத்தின் ‘Vibe’-ஐப் பல மடங்கு உயர்த்துகின்றன.
ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் அட்டகாசமான மெலோடி ரகம். பின்னணி இசையும் அளவாகப் பயணித்துக் காட்சிகளுக்குக் கூடுதல் உணர்வைத் தந்துள்ளது. நினைவுகளை இழப்பதால் ஏற்படும் காதலர்களின் வலியும், அவர்களது உணர்வுகளும் படத்தொகுப்பிலும் அப்பட்டமாகத் தெரியும்படி நேர்த்தியாகப் பணிபுரிந்துள்ளார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.
பிளஸ் & மைனஸ்
பிளஸ்:
-
அறிமுக இயக்குநர் கிஷோர், முதல் படத்திலேயே காட்டியுள்ள நேர்த்தியும் நம்பிக்கையும் (Confident and neat direction).
-
சனத் – இமயா ஜோடியின் பிரெஷ்ஷான கெமிஸ்ட்ரி மற்றும் வாட்ஸ்-அப் மணியின் கலகலப்பான காமெடி.
-
ராஜேஷ் முருகேசனின் துள்ளலான இசை மற்றும் அழகான லொகேஷன்கள்.
-
2 மணி நேரக் குறுகிய கால அளவு (Crisp Runtime) என்பதால் எங்கும் தொய்வில்லாமல் நகர்கிறது.
மைனஸ்:
-
திரைக் கதையின் சில பகுதிகள் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும், வசனங்கள் இன்னும் கொஞ்சம் கூர்மையாகவும் (Crisp & Witty Screenplay) இருந்திருக்கலாம்.
-
மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான அந்த எமோஷனல் கெமிஸ்ட்ரியில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படங்களின் வரிசையில் இதற்கும் இடம் கிடைத்திருக்கும்.
ஒட்டுமொத்தப் பார்வை: ஸ்கோர் செய்ததா ‘ஹார்ட்டின்’?
முன்னாள் காதல், இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், ‘Triangle love + amnesia twist’ மூலம் பழக்கப்பட்ட ஒரு கதைக் கருவுக்குக் கொஞ்சம் மசாலா சேர்த்த விதியும் திரைக்கதையைச் சுவாரசியமாக நகர்த்திச் செல்கின்றன.
ஓவரான பில்டப்கள் இல்லாமல், மனசுக்கு இதமாக, வண்ணமயமாக, நல்ல இசையுடன் கூடிய ஒரு Breezy என்டர்டெய்னராக வந்துள்ள இந்த ‘ஹார்ட்டின்’ படத்தை, தியேட்டரில் பாப்கார்னோடு சந்தோஷமாக என்ஜாய் செய்து பார்க்கலாம்!
மார்க்: 3.5 / 5


