32°C
விளம்பரம்
Advertisement

ஆதார் தகவலில் முக அடையாளம்! – ஜூலை 1 முதல் அமல்!

admin சேலம் Published: March 26, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், அவரவர் தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களது விரல் ரேகை, கருவிழித்திரை உள்ளிட்ட விவரங்கள் மத்திய அரசால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தனிப்பட்ட தகவல்கள் வாங்குவதற்கு ஒருபுறம் எதிர்ப்பு இருக்கும் நிலையில், இத்தகைய தகவல்கள் கசிந்து வருவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இதனிடையே ஆதார் தகவலில் முக அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் புதிதாக அமல்படுத்தப்படுகிறது. UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இத்தகவலை தெரிவித்துள்ளது. தற்போது, கைவிரல் ரேகைகள், கண் கருவிழிப் படலம் ஆதாரில் முக்கிய அடையாளமாகப் பயன்படுத்தப் படுகிறது.

தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.

அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.

ஆனால் வயது முதிர்வு, கடின உழைப்பு, கை ரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால், சிலருக்கு ஆதார் வழங்கும் போதும், பிற பயன்பாட்டின்போது கைவிரல் ரேகையை முழுமையாக பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், முகத்தையும் ஒரு அடையாளமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த நடைமுறை ஜூலை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. எனினும், தேவையின் அடிப்படையில் மட்டுமே முக அடையாளம் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அடிசினல் ரிப்போர்ட் ;

தற்போது மனிதர்களுக்கு வழங்கும் ஆதார் போலவே மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்டமாக தற்போது 2.5 மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அடையாள அட்டையில் மாடுகளில் புகைப்படம் இருக்காது. ஆனால் ஆதார் அட்டை போலவே 12 இலக்க அடையாள எண் இருக்கும். மேலும் உரிமையாளரின் பெயர், முகவரி, மாடின் விலாசம் ஆகியவை இருக்கும். இன்னும் 37.5 லட்சம் மாடுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்